பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்திருக்கும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை அடுத்து அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இவர் யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து கடந்த 4-ம் தேதி தேனியில் இருந்த போது கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள்.
சவுக்கு சங்கர்..
அவ்வாறு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து இவர் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தற்போது சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இரண்டு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் அதிகளவு வந்த காரணத்தால் வழக்குகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்து உள்ளது.
இதில் குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக இரண்டு வழக்குகளும் காரில் கஞ்சா வைத்திருந்ததாக சில வழக்குகளும் என மொத்தம் ஆறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3-வது மனைவிக்கு 3 கோடியில் வீடு..
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட காரணம் காவல்துறையைச் சேர்ந்த பெண்கள் மீது கண்ணிய குறைவான பேசிய பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகளை வைத்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கிறார் சவுக்கு சங்கர்.
இது ஒரு பக்கம் இருக்க இவர் குறித்து புதிய புதிய தகவல்கள் நாள் தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் புதிய, புதிய வழக்குகள் அவர் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே தற்போது ஒட்டுமொத்த மீடியா துறையினரின் கவனமும் சவுக்கு சங்கரின் மீது தான் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சவுக்கு சங்கர் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவலானது தற்போது இணையங்களில் பரவலாக பரவி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கரின் லீலைகள்..
அதில் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருப்பதாவது கிருஷ்ணவேணி தியேட்டருக்கு பின்னால் சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான வீடு ஒன்றை தன்னுடைய மூன்றாவது மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற பகீர் தகவலை சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சவுக்கு சங்கர் இதற்கான பட்டா சிட்டா அடங்கல் எல்லாமே எடுத்து தரேன்.. டி நகர் போன்ற பிரைம் ஏரியாவில் எனக்கு வீடு வேண்டும் என சவுக்கு சங்கரின் மூன்றாவது மனைவி கேட்டிருக்கிறார் என பல்வேறு புகார்களை அடுக்கி இருக்கிறார்.
இதனை அடுத்து தமிழகமே சவுக்கு சங்கர் வழக்கில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சவுக்கு சங்கரின் லீலைகளை பற்றி தமிழா தமிழா பாண்டியன் கூறிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.