அந்த வார்த்தைக்கே இடம் இல்ல..! இது தமிழக வெற்றி கழகம்..! விஜய்யின் அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். தமிழக சினிமா வரலாற்றில் மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் இன்று 2024 பிப்ரவரி 2-ம் தேதி மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்குள் வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டது. அதேபோல நடிகர் விஜய் இன்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்.

தான் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் நடிகர் விஜய் ஒரு வார்த்தையை முற்று முழுதாக தவிர்த்திருக்கிறார். அந்த வார்த்தை வேறு எதுவும் அல்ல தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வந்த “திராவிடம்” என்ற வார்த்தை.

இதுவரை வந்த தமிழக அரசியல் கட்சிகளில் திராவிடம் என்ற வார்த்தை இடம்பெறாமல் இருந்தது இல்லை. லெட்டர் பேடு கட்சிகளில் இருந்திருக்கலாமே தவிர பிரதானமான கட்சிகளில் திராவிடம் என்பது ஒன்று வார்த்தை தொடர்ந்து இடம் பெற்று வந்தது.

நடிகர் விஜயகாந்த் கூட தன்னுடைய கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பெயர் வைத்திருந்தார். திராவிடம் என்றால் என்ன.? என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

திராவிடம் என்பது மூன்று புறம் கடலால் சூழப்பட்ட தென்னிந்திய நிலப்பரப்பை தான் குறிக்கிறது என்பதுதான் உண்மை. திராவிடம் என்றால் இதுதான் என அரசியல்வாதிகள் பலரும் என்னென்னமோ விளக்கத்தை கொடுத்து பார்த்தார்கள்.

ஆனால், அறிவியல் பூர்வமாக திராவிடம் என்றால் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு பகுதி. அதாவது தென்னிந்திய நிலப்பரப்பை தான் குறிக்கிறது என்பதுதான் உண்மை. அப்படி பார்க்கும் பொழுது இப்படி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறதா..? என்றால் கிடையவே கிடையாது.

அந்தந்த மாநிலத்தின் பெயரையே பிரதானமாக பயன்படுத்தி வந்திருக்கின்றன. இதற்கு முத்தாய்ப்பாக நடிகரும் இயக்குனருமான திரு சீமான் அவர்கள் தன்னுடைய கட்சிக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று திராவிடம் என்ற ஒரு வார்த்தையை தவிர்த்து விட்டு முற்றும் முழுதாக தமிழகத்திற்கான ஒரு கட்சியாக தன்னுடைய கட்சியை அடையாளப்படுத்தி இருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய அரசியல் கட்சியாக இது இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் இப்போது கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் நடிகர் விஜய் திட்டவட்டமாக கூரியுல்ல்ளர்.

மேலும், தன்னுடைய 69 ஆவது படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள இருக்கிறார் என்றும் தொடர்ந்து தீவிர அரசியலை இயங்க இருக்கிறார் என்றும் தன்னுடைய அறிக்கையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜயய்.

இவரது இந்த அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும் திரை துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam