போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!

போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்;

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் .

கடந்த பிப்ரவரி மாதம் இந்த கட்சி தொடங்கப்பட்டது. தனது கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதை அடுத்து எப்போது கட்சியை தொடங்குவார்? என்ன பெயர் இருக்கும் ? கட்சிக்கொடி எப்படி இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது கட்சி கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

கட்சிக்கொடி அறிமுகம்:

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நீலாங்கரை வீட்டில் இருந்து வருகை தந்த நடிகர் விஜய் அவர்களை புஸ்லி ஆனந்த் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

இந்த விழாவில் விஜய்யின் தாய் சோபாவும் தந்தை சந்திரசேகர் இருவருமே வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தில் கொடியை ஏற்றியதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்றார்.

அதன்படி நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

சாதி, மதம் வேற்றுமைகளைக் களைவேன்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியை கூறப்பட்டு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version