tvk

சேர்களை உடைத்து நொறுக்கும் TVK தொண்டர்கள்.. என்ன காரணம்..? தீயாய் பரவும் CCTV காட்சிகள்..!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து அதிகாலை முதலே TVK தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிய தொடங்கி இருக்கிறார்கள். அதிகாலை ஆறு மணி வரை மாநாட்டிற்கு வெளியே தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதிகாலையில் மாநாட்டு திடலுக்கான நுழைவாயிலை திறந்து விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே முண்டியடித்துக் கொண்டு தொண்டர்கள் சீறிப்பாய்ந்தனர்.

tvk (1)

அப்போது மாநாடு திடலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தாண்டி எதிரி குதித்து அங்கே போடப்பட்டிருந்த சேர்கள் மீது ஏறி அடுத்தடுத்த தடுப்புகளை தாண்டி மேடையை நோக்கி முன்னேறினர்.

அப்போது நூற்றுக்கணக்கான சேர்கள் உடைந்து நொறுங்கின. இந்த தள்ளுமுள்ளில் பல தொண்டர்களுக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இப்படி முன்னேறி செல்லும் ரசிகர்களை தடுக்க எந்த ஒரு பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை. காவல்துறையினரோ அல்லது பவுன்சர்களுளோ அந்த இடத்தில் இல்லாதது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

tvk (3)

நேற்று இரவு முதல் காவல் துறையினர் பவுன்சர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் எல்லாம் தாண்டி தவெக தொண்டர்கள் சேர்களை உடைத்து நொறுக்கி மேடையை நோக்கி முன்னேறிய வீடியோ காட்சிகளை பார்த்த நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சேர்கள் உடைக்கப்பட்டு இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட சேர்கள் சேதம் அடைந்திருக்கின்றது .இதனை துரிதமாக சரி செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மாநாடு மாலை 4 மணிக்கு தான் நடைபெற உள்ள நிலையில் தற்போதே மாநாட்டு திடல் நிரம்பி வழிகிறது. இதற்கு மேல் வரக்கூடிய தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வெளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

tvk (2)

சொல்லப்போனால் அந்த விக்கிரவாண்டி வி சாலை முழுக்கவே தொண்டர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல தொண்டர்கள் வீட்டிலிருந்து புறப்படாத நிலையில் இப்போதே மாநாட்டு திடல் நிரம்பி இருக்கிறது.

இன்னும் மாலை 6 மணிக்குள் எவ்வளவு கூட்டம் கூட போகிறதோ..? என்ற குழப்பத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பவுன்சர்கள் மற்றும் காவல் துறையினர் மட்டுமில்லாமல் தவெக நிர்வாகிகளும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

--- Advertisement ---

Check Also

udthai

துணை முதல்வர் ஆனதும் உதயநிதி செய்த செயல்.. மொத்தமும் ஸ்தம்பிச்சு போச்சு..!

இன்னும் சில நிமிடங்களில் துணை முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் உதயநிதி பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து வாழ்த்துக்களை அள்ளி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *