இதோ வருகிறேன் சமயத்தில் வந்து விடுவேன் என்று சரமாரியாக பேசியவர்களின் மத்தியில் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து கோட் படம் முடிந்த கையோடு தளபதி 69 படத்தோடு திரைப்படங்களில் நடிக்காமல் முழு நேர அரசியலில் களம் இறங்கி மக்களுக்கு அளப்பரிய பணியை செய்ய இருக்கிறார்.
அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் சீரும் சிங்கம் போல் இதுதாண்டா தளபதியோட கெத்து என்று சொல்லக்கூடிய வகையில் விஜய் பேசிய பேச்சு பலர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை வைத்துள்ளது.
திமுகவுக்கு ஒரு குத்து.. பாஜகவுக்கு ஒரு குத்து..
இவர் ஒரு கூத்தாடி இவரால் எதுவும் செய்ய முடியாது என்று பேசியவர்களின் மத்தியில் முக்கால் மணி நேரம் அசராமல் பேசி அனைவரையும் அசத்தியிருக்கிறார் நடிகர் விஜய். இந்த 45 நிமிட பேச்சைக் கேட்கத்தான் இவ்வளவு கூட்டம் இவ்வளவு மக்கள் இவ்வளவு நாள் காத்திருப்பு என்பது சாத்தியமாகிவிட்டது.
கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேருக்கு மேல் இந்த மாநாட்டிற்கு வந்திருந்து விஜயின் பலத்தை எடுத்துக்காட்டி இருப்பதோடு எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை முன்னோட்டமாக காட்டி சென்று இருக்கிறார்களா? என்று வியக்கக்கூடிய வகையில் மாநாடு நடந்து முடிந்து விட்டது.
இந்த மாநாடானது உலகத் தமிழர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது. மேலும் தன் மீது தொடர்ந்து வைக்கப்பட்ட விமர்சனங்களான இந்த கூத்தாடிக்கு என்ன தெரியும். இவனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு பதிலடியாக அமைந்துவிட்டது என்று சொல்லக்கூடிய வகையில் மாநாடு இருந்தது.
இது தான்டா தளபதி கெத்து..இதை கவனிச்சீங்களா..
விஜய் பேசிய பேச்சானது ஒரு முன் தயாரிப்பு இல்லாமல் எதார்த்தமாக அவராகவே பேசியது போல் இருந்ததாக திமுக அடித்துச் சொல்லி இருக்கிறார். இதை அடுத்து பெயர் சொல்லாமல் குறிப்பிட்டு பேசிய அவர்களைப் பற்றி கேள்வி எழுந்த போது விஜய்க்கு பயமா? என்று கேட்டார்கள் அதற்கு விஜய் பயமெல்லாம் இல்லை.
நாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. அப்படி எதிரியாக மாறினால் அதற்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று சொன்னது கெத்தாக இருந்தது. மேலும் திராவிட கட்சி வளர்ந்ததற்கு சினிமா தான் காரணம் கூத்தாடிகள் தான் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தையும் ஆண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
தந்தை பெரியாரின் பெயரைச்சொல்லி அவரை ஃபாலோ செய்வது போல குடும்ப அரசியலை மேற்கொண்டு வரும் திமுகவை நேரடியாக தாக்கி இருக்கிறார். அது போல பாசிசம், மோடி மஸ்தான் வேலை என பாஜகவையும் ஒரு கை பார்ப்பது போல் பேசி இருந்த பேச்சு இருந்தது.
இவர்களது ஜால்ஜாப்பு செல்லாது என திமுகவையும், பாஜகவையும் நேரடியாகவே குறிப்பிட்டு பேசியிருப்பது திமுகவைச் சார்ந்தவர்களுக்கு ஒரு குத்து பாஜாவுக்கும் ஒரு குத்து என்று சொல்லக்கூடிய வகையில் தளபதியோட கெத்து இருந்தது என செய்யாறு பாலு கூறுகிறார்.
எனவே எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஆனது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தருமா? அல்லது வெறும் வாய் ஜாலத்தோடு நின்று விடுமா? என்பது தெரிந்துவிடும் என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து பேசி வருகிறார்கள்.