தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் கோட் திரைப்படம் முடிவுற்ற நிலையில் விரைவில் திரையரங்குக்கு வர வேண்டிய படங்களில் ஒன்றாக உள்ளது.
இதனை அடுத்து மற்றொரு படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களம் இறங்கும் இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதற்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார்.
வாகை பூவை கொண்டிருக்கும் கொடி..
இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய தளபதி விஜய் அத்தோடு கட்சியைச் சார்ந்த அனைவரும் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொடியில் இரண்டு யானைகள் கால்களை உயர்த்தி வெற்றியை கொண்டாட கூடிய வகையில் அதன் நடுவே தமிழ் ஈழத்தின் தேசிய மரமான வாகை மரத்தின் வாகை பூவை வைத்து இருக்கிறார்கள்.
இதைப் பார்த்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்துள்ள நிலையில் பனையூரில் கட்சி தலைமை நிலையத்தில் கொடி வெளியீட்டு விழா நடைபெற்றது.
சிவப்பு மஞ்சள் வண்ண பின்னணியில் போர் யானைகள் இரண்டின் மத்தியில் வாகை மலர் கொண்ட கொடியை அறிமுகப்படுத்தி வைத்ததை அடுத்து தமிழன் கொடி பறக்குது என்ற பாடலும் வெளிவந்தது.
இதனை அடுத்து உரை ஆற்றிய தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமையாக உள்ளது .இது கட்சிக்கான கொடி அல்ல. தமிழகத்தின் வருங்காலத்தின் கொடியாகவே பார்ப்பதாக கூறினார்.
மேலும் இந்த கொடியில் வாகை பூ இடம் பெற்று இருக்க காரணம் என்ன என்ற விஷயம் தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எதற்காக தமிழ் ஈழத்தின் தேசிய மரத்தை தனது கட்சியின் கொடியில் வைத்திருக்கிறார் என்ற கேள்விக்கு சரியான பதிலாக இது அமையுமா? என தெரியவில்லை.
இப்ப TVK கொடியில் ..
தற்போது தமிழக வெற்றி கழகக் கொடியில் இடம் பெற்றிருக்கும் இந்த வாகை பூவானது அடுத்த தலைமுறையின் வெற்றி என விஜய் கூறியுள்ள நிலையில் சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூடப்பட்டு வெற்றியை கொண்டாட பகிர்ந்து இருப்பதாக சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது.
இதனை உணர்த்தத்தான் வருங்காலத்தில் இந்த கட்சி மாபெரும் வெற்றியை பெற்று தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைக்கு வரும் என்பதை குறிப்பாக உணர்த்தத்தான் வாகை பூவை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளி வந்துள்ளது.
எனினும் வாகை பூ இடம் பெற உண்மையான காரணம் என்ன என்பது பற்றி விஜய் அறிவித்தால் மட்டும் தான் அதன் உண்மை என்ன என்பது தெளிவாகத் தெரியவரும் அதுவரை தமிழகத்தின் தேசிய மரம் வாகை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி கலந்து கொள்ளாமல் இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் மத்தியிலும் பல்வேறு வகையான கருத்து விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் இந்த விழாவை சிறப்பிக்க கூடிய வகையில் இவர் பெற்றோர்கள் இருவரும் வந்திருந்த போதும் அவர்களை கண்டு கொள்ளாதது போல் தளபதி நடந்து கொண்டது இணையங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.