துணை முதல்வர் ஆனதும் உதயநிதி செய்த செயல்.. மொத்தமும் ஸ்தம்பிச்சு போச்சு..!

இன்னும் சில நிமிடங்களில் துணை முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் உதயநிதி பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.

ஏற்கனவே இவர் துணை முதல்வர் ஆவார் என்ற அறிவிப்புக்காக காத்திருந்த மக்கள் மட்டுமல்லாமல் திமுகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ஒட்டு மொத்த வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு உதயநிதியின் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து வலைத்தளம் முழுவதும் திமுகவினர் அக்கரமித்து விட்டார்களா? என்று சொல்லக்கூடிய அளவு துணை முதல்வராகும் உதயநிதியின் பேட்டிகளும் முன்பு எடுத்த வீடியோக்களும் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

அந்த வகையில் தொண்டர்கள் மட்டுமல்லாமல் அமைச்சராக திகழும் அன்பின் மகேஷ் கூட இதுபோன்ற வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் இது பற்றி கூறிய போது மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று அனைவருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்து இந்த கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலினை உதயநிதி சந்தித்து இருக்கிறார். மேலும் ஆழ்வார்பேட்டையில் நிகழ்ந்த இந்த சந்திப்பை அடுத்து துணை முதல்வராக மாற இருக்கும் உதயநிதியை அன்பில் மகேஷ், டி.ஆர். பாலு சேகர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் துணை முதல்வர் என்பது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வகுத்த பாதையில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்று பதிவு ஒன்றினை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அண்ணன் வராரு மாற்றத்தை தருவாரு என்ற ரீதியில் திமுக கழகத் தொண்டர்கள் காத்திருப்பதோடு தமிழகமும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் உதயநிதி துணை முதல்வர் ஆனதுமே ஒட்டுமொத்த இணையமும் ஸ்தம்பித்து விட்டது என்று சொல்லக்கூடிய அளவு அவரது வீடியோக்களும் பேச்சுக்களும் திரும்பத் திரும்ப இணையங்களில் வலம் வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam