நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
விஜய்யின் அரசியல் பயணம்:
இதையடுத்து எப்போது தொடங்குவார்…? என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் கட்சியின் கொடி அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்து அதற்கான பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த விழாவிற்காக நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து அவரை மிகப்பெரிய அளவில் வரவேற்றனர்.
இந்த விழாவில் கட்சியின் பொருளாளர் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதிலும் குறிப்பாக விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவரது தாய் சோபாவும் தந்தை சந்திரசேகரும் வருகை தந்திருந்தார்.
இதுவே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்று பின்னர் கட்சிக்கொடி அறிமுகம் செய்து வைத்தார்.
கட்சி கொடி அறிமுகம்:
அதில் சிவப்பு மஞ்சள் நிறத்தில் கொடி இருந்தது. அதற்கு நடுவில் வெற்றி அடையாளமான வாகை மலரும் இரண்டு போர் யானைகள் பிளிரும் வகையிலும் இருந்தது.
பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் இந்த கொடியை ஏற்றி வைத்த நடிகர் விஜய் வருகிற மாநாட்டில் இக்கொடியை பற்றிய விளக்கத்தை கூறுகிறேன் என தெரிவித்தார்.
இந்த கொடியேற்று விழாவுக்கு கிட்டத்தட்ட 5000 பேர் வருவார்கள் என போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது ஆனால் வெறும் 300 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.
விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்ததில் இருந்து மிகப்பெரிய அரசியல் வட்டாரம் மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு நடுக்கத்தை கொடுத்துள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சமயத்தில் அரசியல் புள்ளிகளுக்கு அதுவே மிகப்பெரிய ஆட்டத்தை கொடுத்திருக்கிறது.
பயம் வேலை செய்யுது…
ஆம் அதன் வெளிப்பாடாக உதயநிதி ஸ்டாலின் பேசியது மிகவும் வைரலாகியது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிளம்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் விஜய் கட்சி கொடி பாடல் இன்று வெளியிடப்பட்டது.
அதை பார்த்தீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு உதயநிதி ஸ்டாலின் நான் பார்க்கலையே… நிகழ்ச்சியிலிருந்தேன். பார்த்துவிட்டு சொல்கிறேன் என சொன்னார்.
அதை அடுத்து விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார் அவருக்கு என்ன கூறுகிறார்கள் என கேட்டதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த வீடியோ தன் சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாக நெட்டிசன்ஸ் பலரும் இப்பவே பயம் ஆரம்பிச்சிடுச்சு விஜய்யின் அரசியல் ஆரம்பம் உதயநிதி ஸ்டாலினுக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது என கூறி வருகின்றனர்