விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கியது முதலே அரசியல் தளம் என்பது மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏனெனில் பொதுவாகவே நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்றாலே அவர்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாக இருக்கும். ஏனெனில் சாதாரணமாக அரசியலுக்கு வருபவர்களுக்கே மக்கள் செல்வாக்கு என்பது பெரிதாக இருக்காது.
ஆனால் ஏற்கனவே நடிகர்களாக இருந்து விட்டு அரசியலுக்குள் வருபவர்களுக்கு மக்கள் செல்வாக்கு எக்கச்சக்கமாக இருக்கும். நடிகர் எம்.ஜி.ஆர் கூட அப்படி அரசியலுக்குள் வந்து தான் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
மக்கள் யாரை ஏத்துக்குறாங்க
ஆனால் விஜய் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது ஒரு கவனம் பெறக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஏனெனில் தமிழ் சினிமாவிலேயே அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக விஜய் இருந்து வருகிறார்.
தற்சமயம் விஜய்யின் அடுத்த அரசியல் இலக்காக 2026 ஆம் ஆண்டு தேர்தல்தான் இருந்து வருகிறது. அதனை முன்னிட்டு இன்று தமிழக வெற்றி கழகம் சார்பாக மாநில அளவில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
விஜய் குறித்து உதயநிதி
இந்த மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இதற்கு வருகை தந்து இருக்கின்றனர். ஏற்கனவே 90 சதவீதம் இருக்கைகள் முழுமை அடைந்த நிலையில் தற்சமயம் வரும் ரசிகர்களுக்கே இடம் இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு கூட்டம் வந்திருக்கிறது. நடிகர் விஜய் கூட எதிர்பார்க்காத அளவிலான கூட்டம் இது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு இது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக கட்சியின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு அறிவுரை கூறிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் எனது நீண்ட கால நண்பர், சிறு வயது முதலே விஜயை நன்கு தெரியும். மக்கள் பணி தான் முக்கியம், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். என்று கூறியுள்ளார் உதயநிதி.!