தலைவிக்கு தில்லை பாத்தியா..? விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து.. வாணி போஜன் பயமின்றி நச் பதில்..!

நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதை கண்கூட பார்க்க முடிகிறது.

இதனை அப்படியே வாக்காக மாற்றிக் காட்டுவாரா நடிகர் விஜய் என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது. அவருடைய தொண்டர்களின் கையில் தான் இருக்கிறது.

எதிர் வரக்கூடிய இரண்டு ஆண்டுகள் நடிகர் விஜய்க்கு கத்தி மேல் நடக்கக்கூடிய ஆண்டுகளாக இருக்கும் என்பதை ஊர்ஜிதமாக நம்பலாம்.

இது ஒரு பக்கம் இருக்க திரை பிரபலங்களிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டால் அவரை பொது வாழ்க்கைக்கு வரவேற்கிறோம். ஆனால், அவருக்கு வாக்களிக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதல் ஆளாக நடிகை வாணி போஜன் நடிகர் விஜயின் அரசியல் நுழைவு குறித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

நான் செங்கலம் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது அரசியல் மீதான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

அவருக்கும் நாம் ஒரு வாய்ப்பு கொடுத்த கொடுத்து பார்க்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்று..? எல்லாமே நம் கையில் தான் இருக்கிறது. நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது என வெளிப்படையாக நடிகர் விஜய்க்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகர் நடிகைகள் கூட தற்போது வரை நடிகர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை.

ஆனால், நடிகை வாணி போஜன் வெளிப்படையாக நடிகர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். இப்படி திரைப்பிரபபலங்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்கும் போது அவருடைய அரசியல் பயணத்திற்கு உத்வேகமாகவும் அவருடைய தொண்டர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

2026 ஆம் ஆண்டு தேர்தல் ஒட்டுமொத்த தமிழகமும் மட்டுமில்லாமல் இந்தியாவை திரும்பி பார்க்கும் தேர்தலாக இருக்கப் போகிறது என்பது மட்டும் தற்போது நம்மால் உணர முடிகிறது.

வீடியோவுக்கு நன்றி – சன் நியூஸ்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam