தற்குறி, செருப்பு பிஞ்சிரும்.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வாணி போஜனை வசை பாடும் ஆசாமிகள்.. யாருன்னு பாருங்க..!

தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற விஷயம் என்னவென்றால் நடிகர் விஜய் தற்போது அரசியலில் களம் காண தமிழக வெற்றி கழகம் எனும் பார்ட்டியை ஆரம்பித்து மக்கள் நலனுக்காக தேர்தலில் களம் காண போகும் விஷயம் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த விஷயத்தை அடுத்து பல்வேறு விதமான கலவை ரீதியான விமர்சனங்களை அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களும் தங்களது கருத்துக்களை தினம் தினம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அரசியலில் இறங்கும் நடிகர் விஜய்..

அந்த வகையில் தளபதி விஜய் அரசியலில் களம் இறங்கப் போவது முன்பே தெரிந்த ஒன்று தான் அதற்கான நடவடிக்கைகளை அவர் படிப்படியாக எடுத்து வைத்ததன் காரணத்தால் தான் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி திரைப்படங்களில் மக்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய வசனங்களை பேசி நடித்தார்.

இது இன்று, நேற்று நடந்த விஷயம் அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் போன்ற திரை பிரபலங்கள் அனைவருமே இப்படித்தான் வசனங்களை திரைகளில் பேசி அரசியலில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் நடிகர் சீமான், கேப்டன் விஜயகாந்த், நடிகர் கார்த்திக், உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள் அரசியலில் தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்காக சேவை செய்ய முன் வந்தார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய் அரசியலில் களம் இறங்க இருப்பது அவர்களது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை தந்துள்ளது. மேலும் மாற்றத்தை விரும்பக்கூடிய தமிழக மக்களும் இதனை ஆமோதித்து வருகிறார்கள்.

ஆதரவு தந்த வாணி போஜன்..

அந்த வகையில் பலரும் நடிகர் விஜய்க்கு ஆதரவினை தெரிவித்து வரக்கூடிய வேளையில் சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

மேலும் யார், யாருக்கோ வாய்ப்பை கொடுத்தது போல இவருக்கும் ஒரு முறை வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம். அது நம்முடைய கையில் தான் இருக்கிறது. எனவே நான் தளபதி விஜய்க்கு என் முழுமையான ஆதரவை கொடுக்கிறேன் என்று பேசியிருந்தார்.

வாணி போஜனை வசைபாடும் ஆசாமிகள்..

இந்தச் சூழ்நிலையில் தான் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் தமிழக வெற்றி கழகம் துவங்கப்பட்டு அவரின் மக்கள் மன்ற ரசிகர்களாலும் பல தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் பலத்த வரவேற்பை தற்போது விஜய் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பேசிய வாணி போஜனை சில இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு காரணம் முதலமைச்சர் பதவி என்ன அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? வந்தவர், போனவர் கெல்லாம் தூக்கிக் கொடுப்பதற்கு என்கிற தொனியில் இணைய ஆசாமி ஒருவர் பேசியிருக்கிறார்.

மேலும் தற்குறி, செருப்பு பிஞ்சிரும்.. என விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வாணி போஜனை வசை பாடும் ஆசாமிகள் பற்றி இணையங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதனைக் கண்ட நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கடுமையான கண்டனங்களை தற்போது பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து தேர்தல் நேரத்தில் போஸ்டராக அடித்து ஒட்டலாம்.

அப்போது அவர்களுடைய அருமை பெருமை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். தற்போது இவை அனைத்துமே இணையத்தை உலுக்கி விட்டது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version