கார் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு சைதை சாமி அவர்களின் ஒரே மகனான வெற்றி துரைசாமி கடந்த நான்காம் தேதி தன்னுடைய உதவியாளர் கோபிநாத் என்பவர் சிம்லா மற்றும் லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். திரைப்பட இயக்குனருமான இவர் படப்பிடிப்புக்கான லொகேஷனை பார்வையிடவும் இந்த சுற்றுலாவை பயன்படுத்தி இருக்கிறார்.
வெற்றி துரைசாமி
சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து கடுமையான விபத்துக்குள்ளானது.
இதில் காருடன் அதில் பயணித்த மூவரும் சட்லஜ் நதியில் விழுந்தனர். கார் ஓட்டுநர் சுடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி எங்கே சென்றார்..? என்று தெரியவில்லை. மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
இது ஒரு பக்கம் இருக்க விபத்து நடந்த பகுதியில் சிதறிய மனித மூளை பாகம் ஒன்று கிடந்ததை கைப்பற்றிய தேடுதல் குழுவினர் அந்த மூளை யாருடையது என்பதை ஆய்வு செய்ய டிஎன்ஏ பரிசோதனைக்காக மாநில டிஎன்ஏ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
சைதை துரைசாமியிடமும் இதற்கான மாதிரிகள் பெறப்பட்டு இரண்டு இரத்த மாதிரிகளும் ஒன்றா அல்லது வேறு வேறா என்று பரிசோதனை நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சரளமாக மீட்கப்பட்டுள்ளது.
உடல் மீட்பு
இந்த விபத்து நடந்து எழுந்திருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அவரது உடலை மீட்பு படையினர் மீட்டிருக்கின்றனர். வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பல்வேறு மாணவர்களின் அரசு பணி தேர்விற்கும், உயர் கல்விக்கும் தன்னுடைய சொந்த செலவில் உதவி செய்தவர் சைதை துரைசாமி அவர்கள். இன்று பலர் மிகப்பெரிய அரசு பதவிகளில் இருக்க காரணம் ஆக இருக்கும் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.
அண்ணாரை இழந்து வாடும் சைதை துரைசாமி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த மன வலியை தாங்கும் மனதிடத்தை எல்லாம் வல்ல இறைவன் கொடுக்க வேண்டும் என்று தமிழகம் வலைதளம் சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்து கொள்கிறோம்.