விஜய் ரசிகர்கள் கட்டிக்கொடுத்தது வீடு.. விஜய் படத்தை வைத்தே பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்க தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து இருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இதனை அடுத்து 2026 ஆவது ஆண்டு முதற்கொண்டு அரசியலில் முழு நேரம் களம் இறங்க போகும் தளபதி மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது தன்னுடைய கட்சிப் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய்..

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து தளபதி 69 படத்தோடு திரை உலகிற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய இவர் வா தலைவா வா.. என்ற பாடலுக்கு ஏற்ப விரைவில் அரசியலில் களம் காண உள்ளார்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் என் கணவர் செய்த வேலை.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா..

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை மக்களுக்கு ஏழு புதிய வீடுகளை கட்டிக் கொடுத்து இருக்கிறார். தளபதி விஜய் இது குறித்து சில விஷயங்கள் இணையத்தில் பரவி வந்துள்ளது.

ரசிகர்களுக்கு கட்டிக் கொடுத்த வீடு..

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்பதை 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் களம் காண இருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து இவரை ரசிகர்கள் பெருமளவு வரவேற்று வருகிறார்கள்.

தளபதியோடு கூட்டணி வைக்க பல கட்சிகள் தயாராக உள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அரசியல் பணிகளை நிர்வாகிகளினுடைய துணையோடு சிறப்பாக விஜய் செய்து வருகிறார்.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

மேலும் கட்சிப் பணிகளை புஸ்ஸி ஆனந்த் மூலம் சிறப்பாக நடத்தி வரும் தளபதி விஜய் கும்மிடிப்பூண்டியில் வீடு இல்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு ஓட்டு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். அந்த வகையில் ஏழு வீடுகள் தற்போது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புஸ்ஸி ஆனந்த் அந்த வீட்டின் திறப்பு விழாவை செய்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கட்டிக் கொடுத்த வீடு, வீடு போல் இல்லை. ஒரு மோட்டார் ரூம் போல் உள்ளது என இணைய பக்கங்களில் கலாய்த்து தள்ளி சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

இதனை அடுத்து வீடு இல்லாதவர்களுக்கு இந்த சின்ன இடம் கூட சொர்க்கமாக தெரியும். நீங்கள் உதவி செய்யவும் மாட்டீர்கள். உதவி செய்பவர்களை விமர்சனமும் செய்வீர்கள் என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் இதைத் தொடர்ந்து நீங்கள் சொல்வது சரி என்றால் மிக்ஸி இல்லாதவனுக்கு தான் மிக்ஸியோட அருமை தெரியும். பிறகு ஏன் அந்த மிக்ஸியை கொண்டு போய் உடைத்தீர்கள் என்று நடிகர் விஜய் நடித்த சர்க்கார் படத்தின் காட்சியை கொண்டு பங்கம் செய்து வரும் நெட்டிசன்களின் விமர்சனம் தற்போது வைரலாக மாறிவிட்டது.

இதனை அடுத்து விஜய் வீடு கட்டி கொடுத்த விஷயம் தற்போது ஒரு பெரும் பேசும் பொருளாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருவதோடு இவர் ஆட்சியில் இல்லாத போதே வீடு கொடுக்கிறார் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வார் என்று பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version