கிறுகிறுன்னு வருதே.. அரசியலில் விஜய் எடுக்கவுள்ள முக்கிய நகர்வுகள்..! முதல்வன் படத்தை மிஞ்சும் திட்டங்கள்..!

மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக ரசிகர்களுக்கு பட்டாசை கொளுத்தி போட்டது போல நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டுவிட்டு இனி மக்கள் பணியே என் பணி என்ற வகையில் மெர்சலாக தளபதி விஜய் களம் காண இருக்கிறார்.

விஜயின் அரசியல் நகர்வுகள்..

இதனை அடுத்து தற்போது விறுவிறுப்பாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடி வரும் நடிகர் விஜய் இது பற்றி மீடியா முன்பு தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக பேச ஆரம்பிக்கவில்லை.

இதனை அடுத்து அண்ணன் விஜய் எப்போது பேசுவார் இவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தொண்டர்களும் தற்போது காத்திருக்கிறார்கள்.

இவர் கட்டாயமாக அரசியலில் களம் இறங்கினால் எங்கள் ஓட்டு இவருக்குத்தான் என்று ஒரு சாராரும், இவனெல்லாம் யாரு.. அரசியலுக்கு என்று காண்டாக கோபத்தோடு ஒரு கூட்டமும் வார்த்தை ஜாலங்களால் பேசி வரும் வேளையில் சாமானிய மக்கள் எது நடந்தாலும் நல்லதே நடக்கட்டும் என்ற ரீதியில் இருக்கிறார்கள்.

தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இந்த படம் முடிந்த முன்பு வெற்றிமாறனோடு இணைந்து தனது 69 ஆவது படத்தையும் முடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவார். அதனை அடுத்து அரசியல் சதுரங்கத்தில் இவரது நகர்வுகள் படு வேகமாய் இருக்கும் என நம்பலாம்.

முதல்வன் படத்தை மிஞ்சும் திட்டங்கள்..

இனி மக்களோடு மக்களாய் பயணிக்க போகும் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை மக்கள் மனதில் பதிய திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தின் கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களின் மனதில் என்ன ஆசை ஒளிந்து இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கும் இவர் பத்திரிக்கையாளர்களிடம் வித்தியாசமான அணுகு முறையை கையாள போகிறார்.

இதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் எந்த பத்திரிக்கையாளர் நினைத்தாலும் விஜயுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணுகு முறை அரசியலில் அவருக்கு கை கொடுக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.

ஏற்கனவே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது இவர் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்து பல நல திட்டங்களை மக்களுக்காக செய்வாரா? அதற்கான சூழ்நிலை விரைவில் கனியுமா? என்பது 2026 தேர்தலில் உறுதியாகிவிடும்.

ஏற்கனவே சீமான், உலகநாயகன் கமலஹாசன், சரத்குமார் போன்றோர் மக்கள் பணிக்காக கட்சிகளை ஆரம்பித்து பேசி வரும் நிலையில் மீண்டும் ஒரு திரையுலகை சார்ந்த பிரபலம் அரசியலில் களம் கண்டு வெற்றிக்கனியை பறிக்குமா? என பல சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.

பொறுத்தவர் பூமியாழ்வார் என்ற கருத்துக்கு ஏற்ப எத்தனை காலம் ரஜினிகாந்த் காக எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. எனினும் அந்த குறையை தளபதி விஜய் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் இளைய தலைமுறைகள் அனைத்தும் அவரது வரவை வெடி போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version