மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் கோயில் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும் என்ற ஒரு வசனத்தை பேசி இருப்பார். அவருடைய நோக்கம் ஹிந்து கோயில்களை எதிர்ப்பது அல்ல என்பதை ஒரு திரைப்படமாக பார்க்கும் போது நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அந்த காட்சியை மட்டும் தனியாக பார்த்தால் கோயில் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும் என்று சொல்லும் விஜய்.. சர்ச் வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும்.. மசூதி வேண்டாம் மருத்துவமனை தான் வேண்டும்.. என கூறாமல் அது என்ன கோயிலை மட்டும் வேண்டாம் என்று கூறுவது…? என்ற ஒரு உணர்வு ஏற்படும் விதமாகத்தான் அந்த காட்சி வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.
விஜய் கோயில் வேண்டாம் என்று கூறி மருத்துவமனை கட்டியிருப்பார். ஆனால் அந்த மருத்துவமனைக்குள் ஒரு கோவில் இருக்கும். இதனால் நடிகர் விஜய் இந்து மதத்தையோ அல்லது இந்து கோயில்களையோ இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை என்பதை நம்மால் ஆணித்தரமாக புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அந்த சமயத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த சர்ச்சை படத்தின் வெற்றிக்கு துணை நின்றது என கூறலாம். அந்த நேரத்தில் நடிகர் விஜய் செய்த ஒரு செயல்தான் தற்போது மிகப்பெரிய சிக்கலை இழுத்து விட்டு இருக்கிறது.
நடிகர் விஜய் இந்த விஷயத்தை அப்படியே கடந்து போயிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், இதற்கு பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் விஜய் செய்த ஒரு விஷயம் தான் தற்போது பெரிய சிக்கலை இழுத்து விட்டுள்ளது.
தன்னுடைய லெட்டர் பேடில் Jesus Saves என தலைப்பு வைத்து தன்னுடைய முழு பெயர் C. Joseph Vijay என்று குறிப்பிட்டு மெர்சல் படத்திற்கான வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதுதான் நடிகர் விஜய்க்கு தற்போது மிகப்பெரிய சிக்கலாக அமைந்திருக்கிறது. அப்போது Jesus Saves என்று அறிக்கை வெளியிட்ட நீங்கள் தற்பொழுது அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் நிலையில் அந்த Jesus Saves எங்கே சென்றது..? உங்கள் பெயருக்கு முன்னால் இருந்த அந்த Joseph என்பது எங்கே சென்றது..? வெறும் விஜய் என்று மட்டும் தானே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
மேலும் அந்த அறிக்கையில் உள்ள உங்கள் புகைப்படத்தில் நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறீர்கள். இது எல்லாம் எதை காட்டுகிறது..? உங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அரசியலுக்குள் வர வேண்டுமா..? என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.
குறிப்பாக பிரபல மருத்துவரும் இணைய பிரபலமான மருத்துவர் காந்தராஜ் அவர்கள் நடிகர் விஜயின் இந்த செயல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி Tamil Niram என்ற யூட்யூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அரசியலுக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சந்தேகங்கள் கேள்விகள் எழுப்பப்படுவது வாடிக்கை. அதே போல, அதற்கு பதில் கொடுப்பதும் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களின் வாடிக்கை.
நடிகர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..