TVK மாநாடு விஜய் பேச்சு குறித்து… இயக்குனர் பா ரஞ்சித் விமர்சனம்..!

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசிய பேச்சு பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

குறிப்பாக தன்னுடைய முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதை சூசகமாக அறிவித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரும் தலித்திய அரசியல் பற்றி தீவிரமாக பேசக்கூடியவருமான பா ரஞ்சித் நடிகர் விஜயின் பேச்சு குறித்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் திரு விஜய் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி மத வர்க்க பிரிவினைவாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்பட போவதாக அறிவித்திருப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன் என பதிவு செய்திருக்கிறார் இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.