தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன. அதே சமயம் தற்சமயம் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்கிறேன் என்கிற முடிவை எடுத்திருக்கிறார் விஜய்.
இது விஜய் ரசிகர்கள் பலருக்குமே மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட விஜய்யின் அரசியல் நகர்வு அடுத்து என்னவாக இருக்கும் என்பது தான் தற்சமயம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை விஜய் சமூகம் சார்ந்து எந்த ஒரு பிரச்சினைக்கும் பெரிதாக குரல் கொடுத்ததே கிடையாது.
விஜய்யின் அரசியல்
அப்படி இருக்கும் பொழுது இவர் கட்சி துவங்கி மட்டும் என்ன செய்து விடப் போகிறார் என்பது பொதுவான ஒரு கேள்வியாக இருந்தாலும் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை கண்டிப்பாக தளபதி நிறைய மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். இதில் எந்த கட்சியோடும் கூட்டணி வைக்காமல் அவர் போட்டியிடப் போவதாக தான் கூறியிருக்கிறார் ஆனாலும் விஜய் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பாரோ என்கிற கேள்வி ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
விஜய் நிறைய மேடைகளில் பேசும்பொழுது அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினாலும் கூட பொதுவாகதான் அதைப் பேசி வருகிறார். எந்த ஒரு அரசியல் கட்சியையும் நேரடியாக பேசியோ எதிர்த்தோ விஜய் பேசி பார்க்க முடிவது கிடையாது.
விஜய்யின் பேச்சு
இந்த நிலையில் தற்சமயம் விஜய் பேசிய பழைய காணொளி ஒன்று திமுகவில் தற்சமயம் நடந்து வரும் நிகழ்வோடு தொடர்புடையதாக இருப்பதால் அதனை ட்ரெண்ட் செய்ய தொடங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
நேற்று உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தி வெளியானது முதலே விஜயின் அந்த வீடியோவும் ட்ரண்டாக தொடங்கி இருக்கிறது. அது வேற எந்த வீடியோவும் கிடையாது லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் கூறும் பொழுது தந்தையின் சட்டையை மகன் எடுத்து போட்டுக் கொள்வது இல்லையா?
அதிர்ச்சியில் ரசிகர்கள்
தந்தை அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து பார்ப்பதில்லையா அதை நாம் தவறு என்று கூற முடியாது என்று ஒரு விஷயத்தை கூடி இருப்பார். அதனை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் அப்பொழுதே விஜய்க்கு இந்த விஷயம் குறித்து தெரிந்திருக்கிறது அதனால் தான் அப்படி பேசி இருக்கிறார் மேலும் இது திமுகவிற்கு இவர் ஆதரவளிக்கிறார் என்பதன் மறைமுகமான பேச்சா? என்றும் கேள்விகளை எழுப்ப துவங்கி இருக்கின்றனர்.