தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தில் இருக்கக்கூடிய நடிகர் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படும் விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தியேட்டர் ஸ்டார் ஆக விளங்க கூடிய விஜய் ஒரு படத்துக்கு சுமார் 200 கோடி அளவு சம்பளம் பெற்று வரும் நிலையில் அண்மையில் இவரது கோட் படம் வெளிவந்ததை அடுத்து கடைசி படத்தில் தளபதி 69 இல் நடித்து முடித்த கையோடு அரசியலில் களம் இறங்கி முழு நேர அரசியல்வாதியாக வலம் வர இருக்கிறார்.
சிக்கலில் சிக்கிக்கொண்ட தவெக கட்சி..
இந்நிலையில் தளபதி 69 படப்பிடிப்பின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கக்கூடிய வேளையில் அவரது தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளிவந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இந்த கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமான முறையில் பல சவால்களுக்கு இடையே வருகின்ற அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரத்தில் இருக்கும் விக்கிரவாண்டியில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளி வந்தது.
அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழலில் ஒரு பக்கம் பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் விஜயின் கட்சிக்கு பெருமளவு வரவேற்பு கொடுத்து வருவதோடு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகளவு சேர்ந்து வருகிறது.
அடடா.. இனி விஜய்யின் அடுத்த மூவ் எப்படி இருக்கும்..
அந்த வகையில் ஒரு சில கட்சித் தலைவர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து ஓப்பனாக தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத்தலைவர் சந்தீப் தற்போது தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவராக இருக்கும் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த நோட்டீசில் இன்னும் ஐந்து நாட்களுக்குள் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியில் இருக்கும் யானை சின்னத்தை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டாலும் அல்லது நீக்குவதற்கு மறுப்பு தெரிவித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் கட்சி மாநாட்டை நடத்தக்கூடிய சமயத்தில் கட்சிக்கு வந்திருக்கும் சிக்கலை தீர்க்க விஜய் எப்படிப்பட்ட முவ்வை செய்வார் என்று ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.