கள்ளச்சாராய பலி.. ஆளும் அரசை இறங்கி அடித்த தவெக தலைவர் விஜய்.. பற்றி எரியும் விவகாரம்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் அரசியலில் களம் கண்டு தமிழக முதல்வர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற நபர்கள் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பக்குவமான பணியினை ஆற்றி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

வேறு சில நடிகர்கள் அரசியலில் களம் இறங்கி இருந்தாலும் வெற்றி வாகை சூட முடியாமல் கடைசி வரை திணறிய நடிகர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கும் தளபதி விஜய் செய்திருக்கும் செயலானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராய பலி..

அண்மையில் தான் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் முழு நேரம் ஈடுபட்டு மக்கள் பணியை செய்ய உள்ளதாகவும் அதற்கான வேலைகளை முடுக்கி விட்ட விஷயமும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் தனது 69-ஆம் படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விளக்கி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார்.

இந்நிலையில் இது வரை தீவிர அரசியல் சார்ந்த எந்த ஒரு கருத்தையும் முன் வைக்காமல் இருந்த தளபதி விஜய் தற்போது முதல் முதலாக அரசியல் பதிவு ஒன்றினை பதிவிட்டு இருப்பது அரசியலில் பற்றி எரியக் கூடிய விவகாரமாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் தமிழக அரசியலில் கள்ளச்சாராயப் பலி என்பது தொன்றுதொட்டு நடக்கக் கூடிய தொடர் நிகழ்வாக உள்ளது. இதற்கு அந்த சமயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கள்ளச்சாராயத்தை எந்த ஒரு அரசும் முற்றிலும் அழிக்காமல் இருப்பதை தான் இது போன்ற சம்பவங்கள் பறைசாற்றி வருகிறது.

ஆளும் அரசை இறங்கி அடிக்கும் தவெக..

இந்நிலையில் தன்னுடைய முதல் அரசியல் பதிவாக சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தினால் இழந்த உயிர்களுக்கு எதிராக தன்னுடைய குரலை உயர்த்தி இருக்கிறார் விஜய். இவருடைய இந்த கண்டன பதிவு பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விஜய் மறைமுகமாக எதையும் இல்லாமல் நேரடியாக தமிழக அரசை சுட்டிக்காட்டி தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் வேறு யாரும் இதற்கு காரணம் அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக தன்னுடைய பதிவில் உணர்த்தி இருக்கிறார். நடிகர் விஜயின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் பற்றி எரிந்து வருகிறது.

விஜயின் பதிவானது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25-க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என சொல்லி இருக்கிறார்.

பற்றி எரியும் விவகாரம்..

அத்துடன் கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

 

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனி மேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்வரும் தேர்தலுக்கு தற்போது அச்சாரம் போடக் கூடிய வகையில் விஜயின் பதிவு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version