விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

விஜய் அரசியலுக்கு வந்த காலகட்டம் முதலே அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பரபரப்பாகி வருகிறது. சொல்ல போனால் விஜய் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தனியாக செலவு செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை.

விஜய் சின்னதாக ஒரு பதிவு போட்டால் கூட அது இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக வெடிக்கும் என்கிற அளவிற்கு முக்கியமான ஒரு நபராக விஜய் மாறி இருக்கிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து மக்கள் கண்காணித்து வருகின்றனர்.

விஜய் கொடி விழா:

இதன் மூலமாக விஜய் குறித்த எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தன் 200 கோடி சம்பளம் கிடைக்கும் சினிமா துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

அதற்கு தகுந்தாற் போல விஜய்யும் தனது கட்சி தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் பெரிதாக செய்து வருகிறார். அந்த வகையில் தனது கட்சி பெயரை அறிவித்த பொழுது கட்சிக்கான கொடி மற்றும் கொள்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் வரும் என்று கூறியிருந்தார்.

அவர் மனைவி வரலை

அந்த வகையில் சமீபத்தில் தனது கட்சியின் கொடியை வெளியிட்டார் விஜய் இரண்டு யானைகள் மற்றும் வாகை பூவை கொண்ட அந்த கொடி அப்பொழுது கொஞ்சம் பிரபலமானது. அதனை தொடர்ந்து வெளியான கொடி பாட்டு என்கிற பாடலும் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் இந்த அரசியல் விழாவில் விஜய் குடும்பத்தை சேர்ந்த யாருமே கலந்து கொள்ளவில்லை. விஜய்யின் மனைவி, மகன் கூட கலந்து கொள்ளவில்லை. விஜய் மட்டும் வந்து மக்களுக்கு நடுவே பேசிவிட்டு சென்றுவிட்டார்.

பிரபலம் கொடுத்த பதில்

இந்த நிலையில் ஏற்கனவே சங்கீதாவிற்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்று ஒரு வதந்தி பரவி வந்தது. அது உண்மைதான் என்பது போல பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் பிரபல சினிமா பிரபலமான சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர் விஜயின் கட்சி கொடி வெளியீட்டு விழாவிற்கு ஏன் அவரது மனைவி வரவில்லை?

அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? இப்பொழுது ஒன்றாக இல்லையா? அப்படி என்றால் அவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் ,விஜய் அவரது மனைவியை பிரிந்துவிட்டார் என்பதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது அவர்கள் எப்போது சேர்வார்கள் என்பதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும் என்று கேட்டிருந்தார் சித்ரா லட்சுமணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version