வரும் பொங்கலுக்கு வெளி வரும் மூன்று படங்கள்!.. உங்கள் தேர்வு என்ன..?

வரும் பொங்கலுக்கு வெளி வரும் மூன்று படங்கள்!.. உங்கள் தேர்வு என்ன..?

கடந்த தீபாவளியன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த திரைப்படங்களைப் போலவே வரும் 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று மூன்று படங்கள் வெளி வர உள்ளது. இதில் நீங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படம் எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

அந்த வகையில் ரசிகர்கள் பொங்கல் என்று எந்தெந்த திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளி வரவுள்ள அரண்மனை 4, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான்.

மேலும் தனுஷின் நடிப்பில் தெறிக்கவிடும் கேப்டன் மில்லர், ரஜினி மகள் இயக்கிய லால் சலாம், விக்ரம் நடிப்பில் தங்கலான், சூர்யா நடிப்பில் மாறுபட்ட கதை அம்சத்தோடு இருக்கும் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2, கங்குவா, தங்கலான் போன்ற படங்கள் இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையில் உள்ளதால் பொங்கல் ரேசிலிருந்து விலகி விட்டது.

இதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய் விட்டதால் வரும் பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் என மூன்று படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.

எனவே விக்ரம் நடிப்பில் வெளிவரும் தங்கலான் படமானது மார்ச் மாதம் 29-ஆம் தேதியும், சூர்யாவின் கங்குவா ஏப்ரல் 13-ஆம் தேதியும், இந்தியன் 2 ஏப்ரல் 12ஆம் தேதியும் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  இதற்கு இடையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வரும் அரண்மனை 4 திரைப்படமும் வெளியாகலாம்.

எனவே 2024 பொங்கல் ரேசில் வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெளி வரக்கூடிய நிலையில் நீங்கள் எந்த படத்தை முதலில் போய் பார்ப்பீர்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version