வந்தாச்சு வந்தாச்சு அறிவிப்பு வந்தாச்சு….தீபாவளிக்கு வெளிவரும் சிவகார்த்திகேயனின் பிரின்சஸ் திரைப்படம்!

தமிழ் திரைத்துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இன்று தன்னுடைய அபரிமிதமான உழைப்பால்  மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதுகிறார்கள்.

இவரின் டாக்டர், டான் படங்களின் தொடர் வெற்றிக்கு பின்னால் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்சஸ் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்தப் படத்தில் இவர் வெற்றி கிடைத்தால் அது ஹாட்ரிக் வெற்றி ஆகும்.

இந்தப் படத்தில் இவர் டீச்சராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோ போஷப்கா  நடித்திருக்கிறார்.மேலும் படம் முழுவதும் காமெடி நிறைந்து இருக்கும்  என்பதால் சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது. அப்படிப்பட்ட காமெடி திரைப்படமாக இது அமையும்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்துக்குப் பின்னால் சத்யராஜ் எந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜின் கேரக்டர் பேசும்படி வலுவான ஒரு கேரக்டராக அமைந்து இருக்கும் என்று தெரிகிறது.

அத்தோடு இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட திட்டமிட்டிருக்கிறது. ஏனென்றால் தெலுங்கில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் எகிறி உள்ள நிலையில்  படத்தை ரிலீஸ் செய்தால்  பல கோடி வசூல் செய்யும் என்று நினைக்கிறார்கள்.

பிரின்சஸ்  நடித்துவரும் உக்ரேன் அடக்கி தற்போது தமிழ் கற்றுக் கொண்டு வருவதாகவும் இந்த படத்தில் தமன் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்பது போல தகவல்கள் வந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.

எனவே  வரக்கூடிய சரவெடி தீபாவளி சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு டேன் தவுசண்ட் வாலாவா இல்லை தலைதீபாவளியாக இருக்குமா என காத்திருந்து பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version