பிரியா பவானி ஷங்கர்-ஐ ஓவராக புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகர்..!

பிரியா பவானி ஷங்க (Priya Bhavani Shankar) அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக, மக்கள் மத்தியில் அறிமுகமானார். பின், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின்பு, கடந்த 2017 ம் ஆண்டில் மேயாத மான் படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார்.

Priya Bhavani Shankar

அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே மற்றும் சமீபத்தில் வெளிவந்த அகிலன், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் இப்போது பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இவருக்கு தரப்படும் கேரக்டர்களில், மிக சிறப்பான நடிப்பை வழங்குகிறார். மிக நல்ல முறையில், தனது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார். இவர், விளம்பரங்களிலும் நடிக்கிறார்.

Priya Bhavani Shankar

33 வயதாகும் பிரியா பவானி சங்கர், படித்து பட்டம் பெற்றவர். இவரது சொந்த ஊர் மாயவரம் எனக் கூறப்படுகிறது. இவர், மேயாத மான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான தமிழ் – பிலிம்பேர் விருதை பெற்றிருக்கிறார்.சில நடிகர்கள், வருமானம் தரும் மற்ற தொழில்களில் ஆர்வம் காட்டுவதைப் போல, லயம்ஸ் கார்னர் என்ற பெயரில், பிரியா பவானி சங்கர் புதிதாக ஓட்டல் ஒன்றை சென்னை, மாம்பாக்கத்தில் துவக்கி இருக்கிறார்.

படங்களில் நடிப்பதோடு, ஓட்டல் நிர்வாகத்தையும் கவனிப்பதில் தீவிரம் காட்டி வரும் பிரியா பவானி சங்கர், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

Priya Bhavani Shankar

இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று, ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், முதன் முறையாக தமிழ் பேசும் நடிகை பிரியா பவானியுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அடுத்தடுத்து, இவருடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது என, மேடையிலேயே பிரியா பவானி சங்கரை புகழ்ந்து பேசினார். மேலும், பிரியா பவானி சங்கரின் சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 70 லட்சம் என்ற நிலையில், இந்த படத்துக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் தரப்பட்டிருக்கிறது.

பத்துதல படத்தில் நடித்த இவருக்கு 70 லட்சம்தான் சம்பளம் என்ற நிலையில், திடீரென ஒரு கோடி ரூபாயாக சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும், இவருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என, வெளிப்படையாக மேடையில் மக்கள் மத்தியில் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Priya Bhavani Shankar

வழக்கமாக, பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் இதுவரை சர்ச்சை எதிலும் சிக்காமல் நல்ல டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குநராக பெயர் பெற்ற ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் பற்றி ஓவராக புகழ்ந்து பேசியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து, இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version