என் மகள் இல்லப்பா… வளர்ப்பு மகள் தான் எந்த காரியத்தை செய்தவள் கோபத்தில் கொப்பளிக்கும் ராஜ்கிரண்!

முரட்டு உருவத்துடன் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக தடம்பதித்த ராஜ்கிரண்  சிறந்த குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல தயாரிப்பாளரும் கூட. இவருக்கு ஒரு மகன் மட்டுமே இருக்கிறார் இவர் பெயர்  திப்பு சுல்தான் என்கிற நைனார் முகமது.

 ஆனால் நேற்று இணையத்தில் ராஜ்கிரணின் மகள் மதம் மாறி ஒரு சீரியல் நாயகனை திருமணம் செய்ததாக வந்த செய்திகள் வெளிவந்தது. இதை அடுத்து இவர் ரசிகர்களுக்கு  அது நிமித்தமாக ஒரு விளக்கம் அளித்திருந்தார். அது என்ன என்றால் தனக்கு ஒரு மகன் மட்டுமே இருப்பதாகவும் இந்த பெண் இந்து மதத்தைச் சார்ந்த வளர்ப்பு மகள் இவள் பெயர் பிரியா.

 இந்த ஜீனத் பிரியா என்கிற பிரியா தான்  சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் காதலிக்கும் விஷயம் அறிந்த உடனேயே நான் அவரைப் பற்றி விசாரித்த போது அவரது நடத்தை மற்றும் அவரது செயல்கள் சரிவர இல்லாததால் நான் அவளிடம் இந்த வரன் வேண்டாம் வேறு வரன் பார்க்கிறேன் என்று கூறியிருந்தேன். இந்த நிலையில்  ஜீனத் பிரியா எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 முனீஸ் ராஜாவின் நோக்கம் என் மகளை திருமணம் செய்து கொண்டு எனது பெயரை பயன்படுத்தி பணம் மற்றும் திரையுலகில் அடியெடுத்து வைக்கலாம் என்பதுதான். இத்திருமணமானது முனீஸ் ராஜாவின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் தான் நடந்திருக்கிறது.

முகநூலில் தொடங்கிய அவரது நட்பு, காதலாகி இன்று திருமணம் வரை சென்று முடிந்து விட்டிருக்கிறது. எனக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருக்கலாம். ஆனால் எனது மகளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றுமே எனக்கு அவர் மருமகன் ஆக முடியாது என்று கோபத்தில் கொப்பளித்தார் ராஜ்கிரண்.

மேலும் பிரியாவை வளர்ப்பு மகள் என்று எந்த இடத்திலும் காட்டிக் கொடுக்காத ராஜ்கிரன் இடமே இந்த பெண் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது அவருக்கு மிகவும் மன உளைச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்று கூறுகிறார்களோ?

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …