“விளக்கு”… இருக்கும் விசேஷ விஷயங்கள்..!” – விளக்கமாக தெரிந்து கொள்ள வாங்க..!

அனைத்து மதத்தவராலும் விளக்கு ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது அனைவருக்கும் தெரியும். இந்த விளக்கு பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு தன்மையில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் அதை ஏற்றுவதன் மூலம் நமக்கு நன்மையும் கிடைக்கிறது.

lamp

குறிப்பாக விளக்கை ஏற்றக்கூடிய குடும்பத் தலைவிகளுக்கு ஒற்றை விளக்கை ஏற்றலாமா? அல்லது இரண்டு விளக்குகளை ஏற்றலாமா? என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுவதோடு எத்தனை முகத்தை நாம் திரியை போட்டு ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகங்களும் உள்ளது.

எனவே அது பற்றிய விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தினமும் நாம் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பானது.மேலும் வீட்டில் விளக்கு ஏற்றுவதால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

lamp

நீங்கள் விளக்கு ஏற்றும் போது எத்தனை முகத்தை ஏற்ற வேண்டும். எத்தனை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்புதான் .அதனை சரிசெய்ய இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தினாலே போதுமானது உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகிவிடும்.

தீபத்தில் ஒரு முகத்தை நீங்கள் ஏற்றுவதன் மூலம் சாந்தமான மனநிலையை இது குடும்பத்தில் உருவாக்கிக் கொடுக்கும். இரண்டு முகம் தீபம் ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் ஏற்படுகின்ற துயரங்கள் அகலும். செல்வம் கிடைக்கும். மதிப்பு உயரும்.

மேலும் மூன்று முகம் தீபத்தை ஏற்றும் போது உங்கள் செயல்களில் ஏற்படுகின்ற தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். மனதில் நம்பிக்கை ஏற்படும். நான்கு முகமாக உங்கள் தீபத்தை ஏற்றும் போது சொத்து, சுகங்கள் சேர்ந்து ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

lamp

ஐந்து முக விளக்கினை ஏற்றும்போது குறைவில்லாத செல்வம் நல்வாழ்வு உங்களுக்கு ஏற்படும்.மேலும் ஒற்றை தீபத்தை ஏற்றுவதை விட இரட்டை தீபங்களை ஏற்றுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தீபம் ஏற்றும் போது கட்டாயம் பெண்கள் கையில் வளையல், மெட்டி, புருவம் மத்தியில் குங்குமம், திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் தரித்துக்கொண்டு தான் விளக்கினை ஏற்ற வேண்டும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version