பிக்பாஸ் வீட்டை வெளியே உங்க கூட அப்படி இருக்கணும்… – ரச்சிதா மகாலட்சுமி-யிடம் அசடு வழிந்த போட்டியாளர்..!

பிக்பாஸ் போட்டியாளராக தன்னை பிக்பாஸ் 6 வது சீசனில் இணைந்து கொண்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தன்னுடைய ஆட்டத்தை துவங்கி இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த பிக்பாஸ் வீட்டில் காதல் கதைகளும் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக பிக்பாஸ் வீடு என்றால் ஏதாவது ஒரு இளம் ஜோடிகள் காதல் பற்றி கொள்வதும் அதை சுற்றி ஒரு 20 நாட்களை கடத்தும் வழக்கமான ஒரு விஷயம். அந்த வகையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கும் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான மாஸ்டர் ராபர்ட் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமியிடம் ஜொள்ளு விடும் சில காட்சிகளும் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஏற்கனவே பிக்பாஸ் வனிதா விஷயத்தில் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர் தற்பொழுது ரட்சிதா மகாலட்சுமியிடம் சொல்லிவிட்டு பேசியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, நான் பொதுவாக சீரியலே பார்க்க மாட்டேன்.. ஒருமுறை எதேச்சையாக நீங்கள் நடித்த சீரியலை பார்க்க நேர்ந்தது. அதனை பார்த்தவுடன் நான் உங்கள் அழகில் விழுந்து விட்டேன்.. டொய்ங் என ஆகிட்டேன்.. நான் உங்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

வீட்டிற்கு வெளியேயும் உங்களுடன் நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று அசடு வழிந்தார். இதனை கேட்ட சக பிக்பாஸ் போட்டியாளர்கள் அது நீங்க இங்க நடந்துகுரத பொருத்து இருக்கு என்று கலாய்த்து தள்ளினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டர் நடவடிக்கையை கேலி செய்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் போல் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறுவது உண்மைதான்.. ஆனால் இந்த அளவுக்கு வெளிப்படையாக வெள்ளந்தியாகவா இருப்பது.. என்று ராபர்ட் மாஸ்டர்-ஐ விளாசி வருகிறார்கள்.

இப்படி பிக்பாஸ் தொடங்கிய சில நாட்களிலேயே நடிகை ரச்சிதா மகாலட்சுமி-யிடம் ஜொள்ளு விட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர். வரும் நாட்களில் என்ன என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லையே..? என்று புலம்பி வருகிறார்கள் ரட்சிதா மகாலட்சுமியின் ரசிகர்கள்.