பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன் பயனாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட சிலரில் நடிகை ரைசா வில்சனும் ஒருவர். ஆரம்பம் முதலே எந்தவித சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாமல் கெட்ட பெயர் எடுத்துக் கொள்ளாமல் தன்னை ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள் வைத்து இருந்தார் ரைசா.
எந்த ஒரு கெட்ட பெயரும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். இந்தப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ரைசாவிற்கும் இந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று சினிமாவில் கலக்கி வருகிறார் ரைசா வில்சன்.
தற்போது இவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கின்றன மேலும் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். கோலிவுட்டின் பிசியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
படங்களில் தனக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லை என்றாலும் இணையத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுக்க முழுக்க ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார் ரைசா வில்சன்.
அடிக்கடி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது நீச்சல் குளத்தில் எதிரி குதிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வின்னர் கிரண்-ஐ ஓரம்கட்டிட்டீங்க.. என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.