‘பொதுவாக எம்மனசு தங்கம்’ – பாடல் வரியை நிஜமாக்கிய ரஜினி..!

விக்ரம்-சூர்யா நடித்த ‘பிதாமகன்’ விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ சூர்யா நடித்த மாயாவி என பல திரைப்படங்களின் தயாரிப்பாளர் துரை. இதில் பிதாமகன், மாயாவி இரண்டும் இயக்குநர் பாலா இயக்கிய படங்கள்.

தயாரிப்பாளர் துரை, தயாரித்த சில படங்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்தால், நாளடைவில் இவரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.  தற்போது, உடல்நிலை சரியில்லாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்.

அவருக்கு மருத்துவம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல், வைத்திய செலவுக்குக் கூட வழியில்லாமல் தவித்து வருகிறார்.  எனவே, சினிமாத் துறை சார்ந்தவர்களிடமிருந்து உதவி கேட்டு இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, மருத்துவ செலவிற்காக உதவி செய்துள்ளார்

இந்நிலையில், இதைப்பற்றி கேள்விப்பட்டு துரைக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  ‘கவலைப்படாதீங்க… நான், உங்களுக்கு உதவி செய்கிறேன்,’ என வாக்கு கொடுத்துள்ளார் வாக்கு கொடுத்தது மட்டுமில்லாமல், துரையின் மருத்துவச் செலவு மொத்தத்தையும் ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவரிடம் மொத்தமாக பணம் கொடுத்தால், சரியாக வராது என கருதிய ரஜினிகாந்த், மருத்துவ செலவுகளைய தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.  இது, தயாரிப்பாளர் துரைக்கு பலத்த நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதையடுத்து, மீண்டும் பழைய துரையாக மீண்டு வருவார் என அவரது நண்பர்களால் நம்பப்படுகிறது.

ரஜினி, தயாரிப்பாளர் துரைக்கு உதவியதை அறிந்த அனைவரும், ரஜினியை புகழ்ந்து வருகின்றனர் இதன் காரணமாகத்தான் அவர் இவ்வளவு நாளும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார் என ரஜினியை பாராட்டி வருகின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்பதற்காகவே அவரை பல கோடி ரசிகர்கள் நேசிக்கின்றனர் இந்தியாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக இருப்பதே அவரின் உயரத்திற்கு காரணம். 

தயாரிப்பாளர் துரை, ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version