23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் கூட்டணிகள் இணைந்திருக்கும் இசைஞானி இளையராஜா… அதிகாரப்பூர்வ தகவல்…!!

23 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ராமராஜனின் படத்திற்கு இசையமைத்த இளையராஜாவின் குரல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதனை அடுத்து தற்போது பிரபல நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்து வரும் சாமானியன் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தற்போது பட குழு உறுதி செய்துள்ளது.

 80, 90களில் மக்கள் நாயகன் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜன் கிராமிய  மணம் வீசும்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். மேலும் எதார்த்தமான இவரது நடிப்பால் கவரப்பட்ட இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 45 வருடங்களில் தான் நடித்த அனைத்து படங்களிலும் கதாநாயகன் ரோலை மட்டும் சீரும் சிறப்புமாக செய்து வந்த இவர் இடையில் மிகப்பெரிய பிரேக்கை எடுத்துக்கொண்டு தற்போது சாமானியன் படத்தில் மீண்டும் கதாநாயகனாகவே நடிக்கிறார்.

 மேலும் இந்த படத்தில் இவருடன் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை தம்பிக்கோட்டை, மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட பட படங்களை இயக்கிய ஆர் ராகேஷ் இயற்றி வருகிறார்.

மிகத் தரமான படங்களை தயாரிக்கும் கம்பெனி ஆன எட்செட்ரா  என்டர்டைன்மென்ட் சார்பில் வி மதியழகன் இந்தப் படத்தை தயாரிக்கப்படுகிறார். இதனை அடுத்து சாமானியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக்கியுள்ள நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் பொதுவாகவே ராமராஜன் இளையராஜாவை எப்போதுமே பிரித்துப் பார்க்க முடியாது.

இவர் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து அந்தப் படத்தின் வெற்றிக்கு இவர் பக்க பலமாக நின்று இருக்கிறார்.

 எனவே இந்தப் படத்திற்கும் அது போலவே இளையராஜாவின் இசை பக்கபலமாக இருக்கும். பல வருடங்கள் கழித்து நடிப்புக்கு திரும்பி இருக்கும் இவருக்கு இளையராஜாவின் இசை கண்டிப்பாக கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …