ராஷ்மிகா மந்தனா-வுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை யாரு..? – என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

 கடந்தாண்டு வெளிவந்த புஷ்பா படத்தின் மூலம் பெருவாரியான ஆதரவை பெற்றதோடு பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

 தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனுடைய படப்பிடிப்பு தற்போது  மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் படக்குழு செயல்பட்டு வருகிறது.

 ராஷ்மிகா தமிழ் தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் அமிதாப்பச்சனுடன் ‘குட் டே’, ரன்பீர் கபூருடன் ‛அனிமல்’ போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.

மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2′ படங்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து பெரிய வெற்றியைப் பெற்றார். இதனை அடுத்துதான் பல பட வாய்ப்புகள் இவர் கதவை தட்டியது. இந்த படத்தில் இவர் விஜய்தேவரகொண்டா கூட இணைந்து நடித்திருந்தார்.

 இப்போது மீண்டும் விஜய் தேவரகொண்டா ஒரு இணைந்து இவர் டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. ஏற்கனவே முதல் படத்தில் நடித்தாலே கிசுகிசுக்கள் பரவலாக வரக் கூடிய நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகி இருப்பதால் இவர்கள் இருவரைப் பற்றி இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.

இந்த கிசுகிசுக்கள் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும்  விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் போன்ற வதந்திகள் அடிபட்ட போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ராஷ்மிகா கருதியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த வதந்திகள் பொய்யான இருவரும் மறுத்துள்ளனர். அதை ராஷ்மிகா மிகவும் கியூட்டான வதந்தி.. எனக்கு திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு பாருங்க.. என்று கூட சிலர் கூறுகிறார்கள்.. இதையெல்லாம் படிக்கும் போது எனக்கே சுவாரஸ்யமாக இருக்கிறது.. கண்டிப்பாக என் ரசிகர்களுக்கு சுவாரஸ்மாகவே இருக்கும் என நம்புகிறேன்.. இது போன்ற வதந்திகளும் அழகாகவே இருக்கின்றது..  என கூறி பரவிவரும் வதந்திகளும் புள்ளி வைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இந்த விஷயத்தை மிகவும் நேர்த்தியான முறையில் கையாண்டு புத்திசாலித்தனமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …