Burger ஆர்டர் செய்த ராஷ்மிகா மந்தனா..! – ஆனா, வந்தது என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். கீதா கோவிந்தம், புஷ்பா படங்களால், ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அவருக்கு பட வாய்ப்புகள் குவீிந்தவண்ணம் உள்ளன.
அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ்ககளை சமூகவலை தள பக்கங்களில் வெளியிடுபவர் ராஷ்மிகா. அந்த வகையில், அவர் வெளியிட்ட ஒரு புதிய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

இப்போதெல்லாம், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, விரும்பிய உணவை வாங்கிச் சாப்பிடுவது பேஷனாகி விட்டது. அதே போல், ராஷ்மிகாவும் பர்க்கர் சாப்பிட விரும்பி, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
பார்சலும், அவர் இருந்த இடம் தேடி வந்தது. பார்சலை திறந்து பார்த்த ராஷ்மிகாவுக்கு அதிர்ச்சி தான் உள்ளே காத்திருந்தது.

பார்சலுக்குள் இருந்தது ராஷ்மிகா ஆர்டர் செய்த பர்க்கர் அல்ல, மணல் நேர கடிகாரமாக பயன்படுத்தப்படும் கண்ணாடிக்குடுவை. அதாவது, இருபுறமும் மணல் உள்ள குடுவைகளில், கீழே சாய்த்தால் ஒரு குடுவையில் இருந்து மறுபுறம் மணல் சரியுமே, அதுதான் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதை வீடியோ எடுத்து ராஷ்மிகா பதிவிட்டுள்ளதால், அது வைரலாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version