அட்டர் பிளாப் பை கொடுத்த குலு, குலு இயக்குனருடன் கூட்டணியில் சேரும் லாரன்ஸ்!

சந்திரமுகி 2 மற்றும் ருத்ரன் படத்தில்  நடித்துவரும் ராகவா லாரன்ஸ் தற்போது  குறுகுறு படத்தின் இயக்குனர் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம்  ஏற்பட்டிருக்கிறது.

 தீவிர ரஜினி ரசிகர் ஆனால் இவர் ராகவேந்திரா பக்தரும் கூட எனவே தான் இவர் பெயரில் லாரன்ஸ் ராகவேந்திரா என்பதை இணைத்திருக்கிறார். பிரபுதேவாவை போலவே மிக சிறப்பான முறையில் நடனம் ஆடக் கூடிய இவர் ஒரு நடன ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் நடனத்தில் தனக்கென்று ஒரு தனி பாணியை கையாண்டு வருகிறார்.

 லோகேஷ் கனகராஜன் உதவியாளராக பணியாற்றிய  இயக்குனர் ரத்தினகுமார் ஆடை மற்றும் குறுகுறு என்ற படங்களை இயக்கியிருந்தார் இந்த இரண்டு படங்களும் சரியாக ஓடவில்லை மேலும் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.  இவரின் மேயாதமான் என்ற படம்தான் இவருக்கு இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது அந்த படத்திற்கு பின் இவர் இயக்கிய எல்லா படங்களுமே குறிப்பிடும்படியாக இல்லை.

ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 படங்கள் முடிந்த பின்பு இவரோடு லாரன்ஸ் ராகவேந்திரா இணைந்து நடிப்பார் என்று தெரிகிறது.

தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்திருக்கக் கூடிய இயக்குனரோடு இவர் இணைந்து படத்தில் நடிக்க இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் கதை என்ன என்று இதுவரை தெரியவரவில்லை மேலும் இதில் என்ன விதமான கதாபாத்திரம் அமையும் என்பதும் கணிக்க முடியவில்லை.

 இந்நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றியைத் தருமா அல்லது முந்தைய படங்களைப்போல பிளாப் ஆகுமா என்பதை பற்றி ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் உன்னுடன் பணியாற்றியவர் என்ற கெத்தில் லாரன்ஸ் இதற்கு சம்மதித்து விட்டார் என்பதும் புரியாமல் ரசிகர்கள் அவர்களுக்குள் பல விதமான கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் இந்த படத்தை பற்றிய விவரங்கள் ருத்ரன் மற்றும்  சந்திரமுகி 2 படப்பிடிப்பு முடிந்த பின்புதான் வெளிவரத் துவங்கும் அதுவரை எந்தவிதமான பேச்சுக்கே இடமில்லை என்று தான் கூற வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version