நடிகை ரேவதி இயக்கிய… விரைவில் வெளிவர உள்ள “சலாம் வெங்கி”- கஜோல்!

 நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே பெண்ணிய கோட்பாடுகளை மிகவும் ஈஸியாக தன் நடிப்பின் மூலம் மக்கள் முன் கொண்டு சேர்த்தவர் நடிகை ரேவதி.

இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்கள் எல்லாம் அவர் பெயரை இன்றுவரை நிலைத்து கூறக்கூடிய அளவில் தான் இருந்துள்ளது .இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு “மித்ர மை பிரண்ட்” என்கிற ஆங்கில படத்தை இவர் இயக்கிய இவர் அதன்பின்னர் இந்தியில் சல்மான் கான் அபிஷேக் பச்சனை வைத்து “பிர்மிலங்கே” என்ற படத்தையும் ரேவதி இயற்றினார்.

 இதன்பின் இயக்குனர் அவதாரத்தில் இவர் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு விட்டார். மேலும் படங்களில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் டைரக்ஷனில் இயக்கியுள்ள ரேவதி கஜோலை வைத்து  ஹிந்தி படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

 இந்த படமும் கட்டாயம் பெண்ணியத்தை உயர்த்தக்கூடிய கருத்துக்களை கூற வண்ணம் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு “சலாம் வெங்கி” என்ற பெயரை வைத்திருக்கிறார்.

இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்த கதையம்சத்தில் கஜோல் நடிக்கக்கூடிய கதாபாத்திரம் மிகவும் வெய்ட்டானதாக இருக்கும் என தெரிகிறது.

வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி தைரியமாக சமாளிக்க வேண்டும் என்பதை இந்தப் படம் மூலம் முழுமையாக  பெண்களுக்கு கூற வரும் சுஜாதா கேரக்டரில் கஜோல் நடித்து இருக்கிறார்.

 மிக விரைவில் அதாவது வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இந்த படமானது ரிலீஸ் செய்யப்படும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக முழுவீச்சில் சென்று கொண்டு இருக்கிறது.இதைக் கேள்விப்பட்ட ரேவதியின் ரசிகர்கள் ஒரு நல்ல திரைக்கதையை இவர் தருவார் என்ற நம்பிக்கையில் படம் வெளியாகக் கூடிய நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தியில் வெளிவரக்கூடிய இந்த படமானது தமிழில் ரீமேக் செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளையும் இவர்கள் தற்போது கேட்கத் துவங்கி விட்டார்கள். இதற்கான பதிலை நடிகை ரேவதி விரைவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …