“இந்திய கிரிக்கெட் அணிக்கு இது தேவையே இல்ல..” – பரபரப்பை கிளப்பிய ரவி சாஸ்திரி..!!

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டி:

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது. இந்த போட்டி மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்பதால், இரு அணிகளும் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. இந்திய அணி மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் கே.எல்.ராகுலை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.இதையடுத்து அடுத்த துணை கேப்டன் யார் என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

பரபரப்பை கிளப்பிய ரவி சாஸ்திரி:

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது குறித்து ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளார் மற்றும் அணியில் துணை கேப்டன் தேவை இல்லை என்றும் மறுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது அறிக்கைகள் குறித்து எப்போதும் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.சமீபத்தில் அவர் இந்தியா அணியின் துணை கேப்டன் மற்றும் கே.எல் ராகுலின் செயல்திறன் குறித்து ஒரு பெரிய அறிக்கையை அளித்துள்ளார்.

ஐசிசி ரிவியூ பாட்காஸ்டில் ரவி சாஸ்திரி, ‘ வீரர்களின் திறமையை வைத்து தான் அணி நிர்வாகம் முடிவு செய்யும். சுப்மான் கில் போன்ற இளம் வீர்களுக்கு எப்படிப் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நான், ஒரே ஒரு கருத்தை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன், இந்தியாவுக்கு துணை கேப்டனை நியமிக்க அவசியமில்லை.

இந்திய அணி சிறந்த XI உடன் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் கேப்டன் களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை வந்தால், அதைக் கையாளக்கூடிய ஒரு வீரரை மட்டும் அந்த நேரத்தில் தேர்வு செய்யுங்கள் என்று ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்து உள்ளார்.இது இந்திய ரசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.