ஆசை ஆசையாக நடந்த நடிகை சுகன்யா திருமணம்.. ஒற்றை வார்த்தையால் ஒரே வருடத்தில் விவாகரத்து..!

பிரபல தமிழ் நடிகை சுகன்யா திருமணமான ஒரு வருடத்திலேயே தனது கணவனை விட்டு பிரிந்தார். 90’களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவருடைய உண்மையான பெயர் ஆர்த்தி தேவி ஆகும்.

சினிமாவுக்காக தன்னுடைய பெயரை சுகன்யா என்று மாற்றிக் கொண்டார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுகன்யாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா.

இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இவருடைய அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை குறுகிய காலத்திலேயே தன் வசம் ஆக்கினார் நடிகை சுகன்யா.

தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்தியன் திரைப்படத்தில் தாத்தா கமல்ஹாசனுக்கு வயதான பாட்டி வேடத்தில் ஜோடியாக நடித்திருந்தார். கமலஹாசன் விஜயகாந்த் கார்த்திக் சத்யராஜ் போன்ற 90களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சுகன்யாவிற்கு ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்தது.

கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடைய திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒரே வருடத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

திருமணத்திற்கு பிறகு சுகன்யா சில தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் கணவருக்கு சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லையாம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் என்னென்ன நடக்கும் என்பது போல மோசமான வார்த்தைகளையும் சுகன்யாவை நோக்கி வீசியுள்ளார்.

அவரது கணவர் இதனாலேயே அவருடைய விவாகரத்து அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட இவர் சென்னையில் வந்து விவாகரத்து வழக்கை பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் எங்களுடைய திருமணம் அமெரிக்காவில் நடந்தது.

எனவே அமெரிக்காவில் தான் விவாகரத்து கோர முடியும்.. எனவே சுகன்யா விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு ஒன்றைத் கொடுத்திருந்தார். ஆனால், சென்னை நீதிமன்றம் நடிகை சுகன்யா சென்னையை சேர்ந்தவர்.

அவர் இந்தியாவில் இந்திய சட்டத்தின் படி விவாகரத்து வழக்கு தொடுக்க முழு அதிகாரம் உள்ளது என்று அவருடைய மனு தள்ளுபடி செய்து இந்த விவாகரத்து வழக்கை ஏற்று நடிகை சுகன்யா விவாகரத்தும் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …