“43 வயதாகியும் இதனால தான் கல்யாணம் பண்ணிக்கல..” – கௌசல்யா-வின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. நடிகர்கள் விஜய், கார்த்தி, முரளி, பிரபுதேவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

இவர் முதலில் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கூட தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே தன்னுடைய பெயரை கௌசல்யா என்று மாற்றிக் கொண்டார். இவருடைய உண்மையான பெயர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் இவர் 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கௌசல்யா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்க்கான காரணத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டு கணவன் குழந்தை என ஒரு சிறு வட்டத்திற்குள் என்னுடைய வாழ்க்கையை அடக்கிவிட நான் விரும்பவில்லை. தற்போது சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவருடைய இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இப்படி உங்களுடைய தாய் தந்தையர் நினைத்து இருந்தால் நீங்கள் பிறந்திருப்பீர்களா..? சமீபகாலமாக இப்படியான கருத்துக்களை கூறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது என்ன வகையான மனநிலை.. என்று புரியவில்லை.. தெரியவில்லை.. என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால், மறுபக்கம், திருமணம் செய்து கொள்வதும் திருமணம் செய்து கொள்ளாமல் காலத்தைக் கடப்பதும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் விருப்பம் தனி மனித சுதந்திரம் என்பதன் பேரில் நடிகை கௌசல்யாவின் இந்த முடிவை விமர்சிக்க தேவை இல்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கௌசல்யா திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் என்று ஒப்புக்குச் சப்பாக ஒரு காரணத்தை கூறி இருக்கிறார். ஆனால் உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …