இதனால் தான் நான் கல்யாணமே பண்ணிக்கல.. – நடிகை சித்தாரா கூறிய அதிர்ச்சி தகவல்..!

கிட்டத்தட்ட 50 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் பிரபல நடிகை சித்தாரா மேலும் சாகும்வரை என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அம்மணி.

அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளத்து பைங்கிளியான சித்தாரா தமிழில் புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த சித்தாரா தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். அந்த வகையில், புதுவசந்தம், புரியாத புதிர் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் சித்தாரா.

தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் ஒரு நபரின் இழுப்பு தான். அந்த நபர் வேறு யாருமல்ல என்னுடைய அப்பாதான் என்று கூறியுள்ளார்.

என்னுடைய அப்பா இறந்த பிறகு வாழ்க்கை மீதான பிடிப்பே எனக்கு போய்விட்டது. நாம் எப்போது பிறப்போம் எப்போதும் மறைவோம் என்று எதுவுமே நிலையில்லாத இந்த உலகத்தில் திருமணம் எதற்கு என்ற ஒரு எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

பலரும் என்னிடம் திருமணம் குறித்த முக்கியத்தை எடுத்து சொல்லி உள்ளார்கள். ஆனால், என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒருநாளும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் வந்ததே கிடையாது.

இனியும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் சித்தாரா. அதனை தொடர்ந்து, உங்களை புரிந்து கொண்டு ஒரு நபர் உங்களை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள முன்வந்தால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேட்டதற்கு நிச்சயம் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளார் சித்தாரா.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version