தொடக்கூடாத இடத்தில் தொட்டு.. அந்த உறுப்பை பிடித்து இழுத்தார்.. – நடிகை ரெஜினா அதிர்ச்சி தகவல்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பயணித்து வரும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு போன் செய்த ஒருவர் பட வாய்ப்பு இருக்கின்றது அட்ஜஸ்ட் செய்யவேண்டும்.. செய்வீர்களா..? என கேட்டார். அட்ஜஸ்ட் செய்வதென்றால் படப்பிடிப்பு தளத்தில் சில அசௌகரியமான விஷயங்கள் இருக்கும் அப்படியான கடினமான சூழ்நிலைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், அவர் சொன்ன அட்ஜஸ்ட் க்கு என்ன அர்த்தம் என்று அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால் அந்த நபர் தொடர்ந்து என்னிடம் இதுவரை அட்ஜஸ்ட் செய்து உள்ளீர்களா..? இந்த படத்திற்காக உங்களால் செய்ய முடியுமா..? என்று கேட்டார்.

இது குறித்து எனது தோழிகளுடன் கலந்துரையாடிய போது தான் இதற்கு உண்டான உண்மையான அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன். அதனை தொடர்ந்து மறுமுறை அவர் போன் செய்தபோது அவருடைய போன்காலை எடுக்காமல் கட் செய்து விட்டேன். அப்போது எனக்கு வயது வெறும் 20 தான்.

அது மட்டுமில்லாமல் கல்லூரியில் படிக்கும்போது ஒருநாள் ஷாப்பிங் சென்றேன் அப்போது கூட்ட நெரிசலில் ஒருவர் தொடக்கூடாத இடங்களை தொட்டு என்னுடைய உதட்டை பிடித்து இழுத்து கிள்ளி விட்டு சென்றார். நான் அதிர்ச்சியானேன் கூட்ட நெரிசலில் அவர் யாரென்று கூட என்னால் பார்க்க முடியவில்லை.

நாம் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்ற ஒருவித பயம் எனக்கு ஏற்பட்டது. சினிமா மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வருகிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும் எந்த மாதிரியான சூழலாக இருந்தாலும் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது பெண்கள் தைரியமாக எதிர்த்து நிற்க கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ரெஜினா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …