ஓ.. அது ஜாக்கெட்டா..? – ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு..! – அந்த இடத்தை மூடாம காட்டும் ரித்விகா..!

ரித்விகா ( Riythvika ) தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார். நல்ல கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம், ரித்விகாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை தந்தது.

ரித்விகா, சென்னையில் வசிக்கிறார். இவர், சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனம்பேட்டை நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில், நல்ல நடிப்பை தந்திருப்பார்.

Riythvika

தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கும் பெண் கேரக்டரில், சிறப்பாக நடித்திருப்பார். அடுத்து, இயக்குநர் விக்கிரமன் இயக்கத்தில், நினைத்தது யாரோ படத்திலும் ரித்விகா நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில், வடசென்னை பெண்ணாக, மேரி என்ற கேரக்டரில் கலையரசன் மனைவியாக நடித்திருப்பார். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த துணை நடிகை பிலிம்பேர் விருது, ரித்விகாவுக்கு வழங்கப்பட்டது.

Riythvika

ஒருநாள் கூத்து என்ற படத்தில், பண்பலை ஒலிபரப்பு தொகுப்பாளராகவும் நடித்திருப்பார். கவுண்டமணி நடித்த, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் நடித்தார்.

பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில், மிக வித்யாசமான ஒரு கேரக்டரில் ரித்விகா நடித்திருந்தார். அழகு குட்டிச்செல்லம், அஞ்சலை, இருமுகன் உள்ளிட்ட படங்களிலும் ரித்விகா நடித்திருக்கிறார்.

Riythvika

ரித்விகாவுக்கு நல்ல பப்ளிசிட்டியை தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2ல், போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற ரித்விகா, இறுதியில் டைட்டில் வினனர் ஆக அறிவிக்கப்பட்டார். யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றியாக, இது அவருக்கு அமைந்தது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத் ராகவேந்திரா, டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், அனந்த வைத்தியநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி சச்சாரி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 105 நாட்கள் வரை நீடித்த இந்த சீசனை, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

Riythvika

இந்நிலையில், வாரந்தோறும் பார்வையார்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், ஒவ்வொரு போட்டியாளராக வீட்டை விட்டு, வாரந்தோறும் ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில், 13 பேர் வெளியேறிய நிலையில், இறுதி வாரத்தில் விஜயலட்சுமி ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

இதில் ஜனனி, விஜயலட்சுமி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவர் மட்டுமே இறுதியாக இருந்தனர்.

வீட்டுக்குள் அதிக அட்ராசிட்டி செய்து, பார்வையாளர்களை பரபரப்பாக்கிய ஐஸ்வர்யா தத்தா தான் வின்னர் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கமல்ஹாசன் ரித்விகா வை டைட்டில் வின்னராக அறிவித்தார். பிக்பாஸ் வீட்டை போலவே, தமிழ் சினிமாவிலும் தனது அமைதியான நடிப்பால், நல்ல நடிகையாக ரித்விகா வலம் வருகிறார்.

Riythvika

ரித்விகா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பதால், அவ்வப்போது தனது படங்களை அப்டேட் செய்கிறார். அம்மணியின் அழகான படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version