Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

அழகான முகமும், தோற்றமும் வாளிப்பான தேகமும், கவர்ச்சியான அழகும் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகள் தான் ஒரு நடிகையின் வெற்றியை தீர்மானிக்கிறது.

நல்ல நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான பின்பு தொடர்ச்சியாக கிடைக்கும் நல்ல கேரக்டர்களும், நல்ல நடிகர்களின் படங்களும் தான் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்த வெற்றியைத் தேடித் தந்து, சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவுகிறது.

ஒருவேளை அப்படி அமையாத பட்சத்தில், நடிகையும் அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தாத பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு ஒதுங்கிவிடும் ஒரு மோசமான சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

சதா

அதில் ஒருவர் தான் நடிகை சதா. ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் தான் சதாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஏற்கனவே ஜெயம் படம் தெலுங்கில் உருவானபோது அதிலும் சதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அடுத்ததாக விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் படத்திலும், அடுத்து அஜித்குமார் நடித்த திருப்பதி படத்திலும், அதைத் தொடர்ந்து வினய் குமார் நடித்த உன்னாலே உன்னாலே படத்திலும், நடிகர் மாதவன் நடித்த எதிரி படத்திலும், ஸ்ரீகாந்த் நடித்த வர்ணஜாலம் படத்திலும் சதா நாயகியாக நடித்திருந்தார்.

வெற்றி பெற முடியவில்லை

ஆனால் இத்தனை படங்களில் நடித்தும், சதாவால் தொடர்ந்து முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் சதா நடித்தார். ஆனால் அவருக்கு சினிமாவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

விலைமாது கேரக்டரில்..

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பே இல்லாத நிலையில், டார்ச் லைட் என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் சதா நடித்ததுதான் அவரது சினிமா வாழ்வில் அவர் செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த கேரக்டரில் அவர் நடித்த பிறகு அவருக்கான சினிமா வாய்ப்புகள் மிக மோசமாக போய்விட்டது.

அதன்பிறகு, விக்ரமுக்கு ஜோடியாக நடித்த சதா நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி என்ற படத்தில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பிஸினஸ்

இப்போது சினிமாவை விட்டு விலகியுள்ள நடிகை சதா, டிவி சேனல்களில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது கலந்து கொள்கிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுதவிர அவருக்கு மும்பையில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமான ரெஸ்டாரண்டுகள் செயல்பட்டு வருகின்றன.

அம்சமான அழகில்..

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு கொண்டே இருக்கும் நடிகை சதா இப்போது லேட்டஸ்ட்டாக புடவையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்நியன் நடிகை சதாவை பாருங்க

பார்ப்பதற்கே மிக அம்சமாக இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களது லைக்குகள் மற்றும் ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.
அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க என்று அவரது வசீகர அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version