தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை சதா பல மெகா ஹிட் திரைப் படங்களில் நடித்திருக்கும் இவர் குறிப்பாக நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மட்டுமில்லாமல் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் வருகிறார் நடிகை சதா. இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இயக்குனர் ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சதா.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரமுடன் அந்நியன், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திருப்பதி மற்றும் உன்னாலே உன்னாலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கக்கூடிய தியேட்டர்களில் ஓட்டக்கூடிய டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி திரைப்படத்தில் நடிகை ஜோதிகா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை சதா தான் முதலில் நடிக்க இருந்தார்.
ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை தவற விட்டு விட்டதாக நடிகை சதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்த படத்தில் நடிகை சதா நடித்து இருந்தால் இவருடைய சினிமா மார்க்கெட் என்பது வேறு லெவலில் கூட இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இது ஒரு பக்கமிருக்க தற்போதும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், லேட்டக்ஸ் ரக உடை அணிந்துகொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது