சாய்பல்லவியா இப்படி நடித்திருப்பது..? – படு சூடான படுக்கையறை காட்சி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. தமிழிலும் பிரேமம் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாய் பல்லவி.

இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்த அவர், பின்னர் செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.

பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் கூட இவர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்த ஷ்யாம் ஷிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் விராட பருவம் திரைப்படம் தயாராகி உள்ளது. ராணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை பிரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

மேலும், தெலுங்கு படம் ஒன்றில் முதன் முறையாக படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கதையின் படி அந்த காட்சி தவிர்க்க முடியாதது என்பதால் துணிந்து நடித்துள்ளாராம் சாய் பல்லவி. இது குறித்த தகவல் அறிந்த ரசிகர்கள், சாய் பல்லவியா இப்படி நடித்துள்ளார்..?? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …