அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருந்து வருபவர் சமுத்திரகனி. சமுத்திரகனி நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒரு அளவுக்கு மேல் அவரது பிரபலம் அதிகரித்து வேற்று மொழி திரைப்படங்களிலும் அதிகம் நடிக்க துவங்கினார்.

மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்த சர்காரி வாரி பட்டா, அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் மற்றும் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் என்று வேற்று மொழிகளில் பிரபலமான நடிகர்கள் நடித்த பல படங்களில் சமுத்திரக்கனி நடித்திருப்பதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு நடிப்பில் பெரிய ஆளாக இருந்தாலும் சினிமாவிற்கு வரும்பொழுது இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சமுத்திரகனி சினிமாவிற்கு வந்தார். அப்படியாக அவர் இயக்கிய சில திரைப்படங்களை இப்பொழுது பார்க்கலாம்.

முதன் முதலாக உன்னை சரணடைந்தேன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார் சமுத்திரகனி 2003 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.

நெறஞ்ச மனசு:

அதன் பிறகு இவரது இயக்கத்தில் நெறஞ்ச மனசு என்கிற திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜயகாந்த் நடித்திருந்தார்.

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

பெரும்பாலும் விஜயகாந்த் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்பதால் சமுத்திரகனிக்கும் அந்த திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

நாடோடிகள்:

அடுத்து  சமுத்திரகனி இயக்கிய திரைப்படம் வெகுவாக பலரால் பாராட்டப்பட்டு வெற்றியை கொடுத்த நாடோடிகள் திரைப்படம். சசி, பாலா, அமீர், சமுத்திரகனி நான்கு பேருமே சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் நட்பின் அடிப்படையில் நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்தார்.

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. அந்த படத்தின் இறுதி காட்சிகளில் கூட சமுத்திரகனி வருவதை பார்க்க முடியும்.

போராளி:

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

அடுத்ததாக சமுத்திரகணி இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்து வெளிவந்த திரைப்படம் போராளி. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கதை ரீதியாக அதிகமாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது.

நிமிர்ந்து நில்:

மீண்டும் சமுத்திரகனியின் இயக்கத்தில் ஒரு மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் நிமிர்ந்து நில்.

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

கிட்டத்தட்ட ரமணா மாதிரியான திரைப்பட அமைப்பை கொண்டு ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்துடன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அப்பா:

மற்ற படங்களில் எல்லாம் இந்த திரைப்படங்களை சமுத்திரக்கனிதான் இயக்கினார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் பலருக்கும் தெரிந்து சமுத்திரகனி இயக்கிய திரைப்படம் அப்பா.

அடேங்கப்பா.. சமுத்திரகனி இயக்கிய பாடங்களா இது..? பட போஸ்டருடன் லிஸ்ட் இதோ..!

2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா திரைப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். ஒரு அப்பா எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

தொண்டன்:

2017 ஆம் ஆண்டு தொண்டன் என்கிற திரைப்படம் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியானது. இதில் விதார்த்த கதாநாயகனாக நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை இவையெல்லாம் சமுத்திரகனி இயக்கி தமிழில் வெளியான திரைப்படங்களாக இருக்கின்றன.