அப்போ இது திரிஷா இல்லையா…? – இளம் நடிகையின் புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தற்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்திருந்தார்.

இக்கதாபாத்திரத்திற்காக மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறார் திரிஷா. இவர் அறிமுகமான நாட்களில் இருந்து மிகச்சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர்.திரைத் துறையில் பல போராட்டங்களை சந்தித்திருந்தாலும் தனது கேரியரில் தொடர்ந்து முன்னேறிச் சென்றவர்.

அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி போன்ற அனைத்து முன்னணி பிரபலங்கள் அவர்களுடனும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு நடனமாடுவது சில காட்சிகளின் நடிப்பது மட்டுமின்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால், சிம்ரன் ஜோதிகா போன்ற முன்னணி கதாநாயகிகள் ஆளுமை செலுத்திக் கொண்டிருந்த நாட்களில் தனக்கென தனி இடத்தை எளிதாக பிடித்தார்.

நடிகை சிம்ரனுக்கு அடுத்து நடன அசைவுகளில் மக்களை ஈர்த்தது திரிஷா மட்டுமே. வருஷங்கள் போக போக இவரது அழகு மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தற்போது இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளார், நடிகை, மாடல் மற்றும் பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான சனம்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை சனம் அவர்கள். இவர் ஒரு மாடல், மாடலிங் துறையை அடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 இல் இவர் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் சனம், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதுபோல தற்போது ட்ரெண்டிங்காக இருக்கும் குந்தவை போன்று மேக்கப் செய்து அதன் லுக்கை வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் அடடே த்ரிஷாவை போலவே இருக்கிறாரே, இவர் நடித்திருந்தாலும் நல்லா தான் இருந்திருக்கும் போலவே என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …