நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில நடிகர்களை காலம் கொண்டாடும். ரசிகர்களும் கொண்டாடுவார்கள். ஏனெனில் அவர்களது கம்பீரமான தோற்றமும், அழகுமே அவர்களது நடிப்பில் பாதி விஷயத்தை பூர்த்தி செய்துவிடும்.

சரத்பாபு

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பான நடிகர் ஒருவர் என்றால் அவர் நடிகர் சரத்பாபு. அண்ணாமலை, முள்ளும் மலரும், வேலைக்காரன், முத்து உள்ளிட்ட பல படங்களில் ரஜினிக்கு நண்பராக நடித்திருப்பார். சட்டம் உள்ளிட்ட சில படங்களில் கமலுக்கு நண்பராக நடித்திருப்பார்.

கடந்த 1980களில் பல படங்களில் கதாநாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துவக்கத்தில் கதாநாயகனாக நடித்த சரத்பாபு ஒரு கட்டத்தில், குணச்சித்திர வேடத்தில் சரத்பாபு நடிப்பு மிக பிரமாதமாக அமைந்தது.

நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

ஆளுமை மிக்க நடிகர்

குறிப்பாக போலீஸ் அதிகாரி, டாக்டர், தொழிலதிபர், வக்கீல் போன்ற கேரக்டர்கள் அவருக்கு மிக சிறப்பாக பொருந்தியது. ஆளுமை மிக்க அந்த கேரக்டர்களில் மிக சிறப்பாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களில், சரத்பாபு நடித்திருக்கிறார். இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் என்ற படத்தில் தான் நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் சரத்பாபு.

72 வயதில் மறைவு

பல படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சரத்பாபு, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 22ம் தேதி தனது 72 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் இருந்த போது, காலமானார்.

சரத்பாபு இறப்பதற்கு முன், தமிழில் கடைசியாக நடித்த படம் போர்த் தொழில். இந்த படம்தான் அவருக்கு கடைசி படமாக இருந்தது. போர்த்தொழில் படத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்திருந்தனர்.

நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

ரமா பிரபாவுடன் முதல் திருமணம்

சரத்பாபு, பிரபல நடிகையாக இருந்த ரமா பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு எம் என் நம்பியார் மகள் சினேகா நம்பியார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். அதனால் சரத்பாபுவுக்கு நம்பியார் மருமகன் என்ற பெருமையும் இருந்தது.

ரஜினி உதவி

இந்நிலையில் சரத்பாபுவின் முதல் மனைவி ரமா பிரபா, நடிக்க வாய்ப்பின்றி ஒரு காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார், இதுகுறித்து ஒரு முறை தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து உதவி செய்தார்.

நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

கிராமத்து வீட்டில் வாழ்கிறார்

இதன் பிறகு ஹைதராபாத்தில் உள்ள அனந்தபுரம் என்ற கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி, ரமா பிரபா அங்கேயே தங்கிவிட்டார். வயது 70களை கடந்த நிலையில், அவரும் அந்த கிராமத்தில் தனிமையில் வசித்து வருகிறார். பிரபல நடிகர் சரத்பாபு திருமணம் செய்த இந்த ரமா பிரபாவும், பல படங்களில் நடித்த அவர் ஒரு பிரபல நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version