நடிகர் கார்த்தி நடித்த சர்தார் படத்தின் அசத்தலான அப்டேட் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

வரும் தீபாவளி என்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி ரிலீஸ் செய்ய உள்ள நடிகர் கார்த்தியின் படமான சர்தார் பற்றிய அப்டேட் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

நடிகர் கார்த்தி தன் அண்ணனைப் போல் இல்லாமல் தனித்துவமான கேரக்டர்களை எடுத்து அதில் நடித்து இன்று ஒரு சிறந்த நடிகராக ஒரு வடித்திருக்கிறார் சூரியா நடித்த சிறுத்தை படத்தை தந்து  பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்தார்.

இந்த படம் ரசிகர்களின் பார்வைக்காக வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். மேலும் இந்த படமானது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

 இந்த படத்திற்கு தேவையான காட்சிகள் அனைத்துமே அதிகளவு வெளிநாட்டில் பிடிக்கப்பட்டது. கார்த்தி இந்தப் படத்தில் இரண்டு ரோல்களை செய்கிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜி விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்த லைலா மீண்டும் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம் ஒரு ரவுண்டு வர இருக்கிறார். இதில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய அப்டேட்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வசூலை வாரிக் குவிக்கும் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

இதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தோடு இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் படத்தின் சிங்கிள் மற்றும் டீசர் வெளியீட்டு தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மேலும் இராமன் இலக்குவனை போல ஓற்றுமையுடன் இவர்கள் இருவரும் திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்கிறார்கள். இருவரும் மிகவும் ஒற்றுமையோடு கூட்டு குடும்ப வாழ்க்கையை வாழ்வது ரசிகர்களுக்கு சொல்லாமல் கூறும் ஒரு அறிவுரை ஆகவே உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version