கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

தற்போது திரைப்படங்கள் தியேட்டர்களில் ஓடுவதே அபூர்வமாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரு திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் மாபெரும் வசூலை குவித்து மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற வகையில் அமையும் போது அந்த படத்தின் பகுதி இரண்டு எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் தற்போது சார்பட்டா பரம்பரை பகுதி 2 வெளி வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளி வந்துள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் எடுக்கப்படுகின்ற படங்களை வீட்டிலேயே இருந்து பார்க்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டது.

சார்பட்டா பரம்பரை..

சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படமானது 2021-ல் வெளி வந்த திரைப்படம். இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி இருக்கிறார். நீலம் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

மேலும் இந்த படமானது 1960-களின் பின்னணியில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குலங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதையாகும்.

இந்த திரை களத்தில் பாக்சிங் முக்கியமான ஒன்றாக இருந்தது. பாக்சிங் மற்றும் அரசியல் குறித்து இந்த படத்தில் தெளிவாக இயக்குனர் பா ரஞ்சித் விளக்கி இருப்பார்.

காதல் அல்லாத கமர்சியல் படமாக இல்லாத இந்த படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இரண்டாம் பாகம் பட்ஜெட்..

முதல் படத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து சார்பட்டா 2 பகுதி எப்போது வெளி வரும் என்று ஒவ்வொரு ரசிகர்களும் கேட்ட வண்ணம் இருந்தார்கள். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதில் நடித்த நடிகர் ஆர்யா சில விஷயங்களை பதிவு செய்து இருந்தார்.

கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

அந்த வகையில் தற்போது இணையமெங்கும் சார்பட்டா 2 உருவாகி வருவதை குறித்து வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்த செய்திகளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விட்டார்கள்.

மேலும் இந்த படத்தின் கதை குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக பா ரஞ்சித்தும் அண்மை பேட்டி ஒன்றில் தன் நிலையை அறிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது சார்பட்டா 2 படத்தின் பட்ஜெட் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்து விட்டது.

கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

இந்த பட்ஜெட்டை கேட்டதுமே ரசிகர்கள் கிறுகிறுவென்று வருதே சார்பட்டா 2 பட்ஜெட் எவ்வளவா? என்று பிரமித்து போனார்கள் என்று தான் கூற வேண்டும். இதற்குக் காரணம் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 90 கோடியாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. எனவே மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாக இருக்கும் சார்பட்டா 2 படத்திற்காக நடிகர் ஆர்யா தயாராகி வருகிறார்.

கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

இதனை அடுத்து இவரது ஆயத்த வீடியோ கூட அண்மையில் வெளி வந்து வைரலாகி உள்ளது. பா ரஞ்சித் தற்போது இயக்கி வரும் தங்கலான் படம் முடிந்த பிறகு இந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம் என தெரிய வந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சார்பட்டா 2 யை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version