முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்..! – அதிர்ச்சி தகவல்..!

பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் வெளியான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களையும் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் தங்களுடைய சுயநலத்திற்காக அரசு இயந்திரத்தை வளைத்து இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமே இயக்கப்பட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதம், மட்டுமில்லாமல் சட்டவிரோதம் இதனை அனுமதித்த முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலர் என மூன்று பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் கூட்டுச்சதி உள்ளிட்டவற்றில்  புகார் கொடுக்க வந்திருக்கிறேன் என்று சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வளாகத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமல் இந்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

தவறாக பயன்படுத்தப்பட்ட அரசு இயந்திரம்

இதற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் போது அதற்கான தனியாக அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

ஆனால், அப்படி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தக்கூடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்காக தமிழக அரசு தன்னுடைய பிடியை தளர்த்தி இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஒட்டுமொத்த திரைப்படத்துறையையும் தன்னுடைய கைக்குள் சுருக்கி வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் திரு.மு.கஸ்டாலின் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த வேலையை செய்து வருகிறார்கள்.

விநியோகஸ்தர்கள் பாதிப்பு..

இது சட்டவிரதம் ஜனநாயகத்திற்கு விரோதம்.. திரைப்பட தொழிலாளர்களுக்கு.. பிற விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு என்று கடந்த சில வாரங்களாகவே பல்வேறு ஊடகங்களில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தற்பொழுது தன்னுடைய புகாரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றிருக்கிறார். மட்டுமில்லாமல், புகார் செய்ய வருகிறேன் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் முறையான அனுமதி பெற்று அவர் அலுவலகத்தில் இருக்கும் பொழுது சென்றிருக்கிறார் சவுக்கு சங்கர்.

ஆனால் அவருடைய புகாரை ஏற்காமல் அவர் புகாரை படித்து கூட பார்க்காமல் சவுக்கு சங்கர் என்பவர் ஒரு உரையை கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்டோம் என்று மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு ஒப்புதலை கொடுத்திருக்கிறது.

முதல்வர் மீது புகார் என்றால் வாங்க மாட்டார்களா..??

முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது புகார் என்றால் வாங்க மாட்டார்களா..? ஒரு சாமானியன் அரசாங்கத்தை கேள்வி எழுப்பக்கூடாதா..? ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இன்னும் சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பயனடை வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை நான் நீதிமன்றம் வரை கொண்டு செல்ல இருக்கிறேன். நான் நேரடியாக நீதிமன்றத்திற்கு சென்றால் லஞ்ச ஒழிப்பு துறையில் நீங்கள் புகார் கொடுத்தீர்களா..? என்ற கேள்வி என்னை நோக்கி வரும்.

தண்ட சம்பளம் வாங்கும் அதிகாரிகள்..

அதற்காகத்தான் நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருக்கிறேன். மற்றபடி, லஞ்ச லஞ்ச ஒழிப்பு துறையில் இருப்பவர்கள் இந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை துளி கூட எனக்கு கிடையாது. இங்கு எல்லோரும் தண்ட சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்,

நீதிமன்றம் என்னிடம் இந்த கேள்வியை எழுப்பும் பொழுது நான் புகார் செய்தேன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நான் பதிவு செய்ய வேண்டும். எனவே தான்.. ஒரு நடைமுறைக்காக இந்த புகாரை கொடுத்திருக்கிறேன்.

இந்த விவகாரத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் ஆக இருவருமே தண்டனைக்குரிய குற்றவாளிகள். இந்த வழக்கை நான் விடப்போவதில்லை என்று கூறியிருப்பது மிகப்பெரிய சலசலப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

கிளம்பிய பரபரப்பு..

இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சிகளே இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கும் இந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளராக முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலராக இருக்கும் ஒரு நபர் இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் என்ற தகவல் பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மறுபக்கம் சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிபதிகள் குறித்த அவதூறான கருத்து பதிவு செய்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த காரணத்தை வைத்து லஞ்ச ஒழிப்பு துறையில் அவருடைய வேலையை நீக்கம் செய்து தமிழக அரசு.

இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் திமுக அரசின் மீது சவுக்கு சங்கர் கோபமாக பேசி வருகிறார். திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமான வேலைகளை செய்து வருகிறார் என்று பேசும் இணையவாசிகளையும் பார்க்க முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்ந்து எப்படி நகர போகிறது..? அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்க போகிறது.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …