தொடுறதுக்கு 1 கோடி.. அவள் பிணத்தை கூட விட்டு வைக்கல.. சில்க் ஸ்மிதா-வின் தோழி கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பெரிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. தமிழ் சினிமாவில் கவர்ச்சி ராணியாக வலம் வந்த இவர் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருக்கின்றார்.

கடந்த 1996ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் நடிகை சில்க் ஸ்மிதா. ஆனால் இது தற்கொலை அல்ல கொலை என்று அவருடைய உறவினர்கள் பலரும் கூறினார்கள்.

இந்நிலையில், நடிகை சில்க்ஸ்மிதாவின் ஆஸ்தான நடன இயக்குனரான புலியூர் சரோஜா சில அதிர்ச்சிகரமான விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இதுவரை பலரும் கேட்டிராத தகவல்களை கூறியுள்ளார் புலியூர் சரோஜா.

அவர் கூறியதாவது, சில்க் ஸ்மிதா நடனமாடிய பெரும்பாலான நடனங்களுக்கு நான்தான் கோரியோகிராபி செய்தேன். அவளிடம் (சில்க்ஸ்மிதா) யாராவது கால்சீட் கேட்டு வந்தால் முதலில் புலியூர் சரோஜா வை பாருங்கள் அவருக்கு சம்மதம் என்றால் எனக்கு சம்மதம் என்று தான் கூறுவார்.

அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக இருந்தோம். படப்பிடிப்பு தளங்களில் படப்பிடிப்பு முடிந்த பிறகு என்னுடைய மடியில் தான் படுத்து தூங்குவாள். அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டு துருதுருவென்று இருப்பாள். அவர் ஒரு சுட்டித்தனமான பெண்.

ஒரு முறை ஒரு வாரத்தில் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று என்னிடம் கூறினாள். ஆனால், வேறு யாரிடமும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்னை அணுகி சில்க் சில்க் ஸ்மிதாவை தொட்டால் மட்டும் போதும் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று கூட கேட்டிருக்கிறார்கள்.

நான் என்ன உங்களுக்கு மாமாவா..? என்று அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கின்றேன். அவள் சில்க்ஸ்மிதா மரணம் அடைந்து பிணவறையில் இருக்கும் அவளது பிணத்தை கூட விட்டு வைக்காத அரக்கர்கள் ஏராளம்.

இந்தக் கொடுமைகள் எல்லாம் என் கண்ணால் நான் பார்க்க நேர்ந்தது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் நடன இயக்குனர் புலியூர் சரோஜா. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை பெற்றுக் கொள்ளக்கூட ஆளில்லை அப்பொழுது. அதன் பிறகு விவரம் அறிந்த அவரது உறவினர்கள் சில்க் ஸ்மிதாவின் உடலை பெற்றுச் சென்றனர். மேலும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்துள்ளார்கள் என்று அவருடைய உறவினர்கள் தரப்பில் பயங்கரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.

இன்டர்நெட் தொலைக்காட்சி என எதுவுமே இல்லாத அந்த காலத்தில் கூட இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. சில்க் சுமிதாவின் மரணத்தில் பிரபல அரசியல்வாதிகள் தொடர்பு இருப்பதாக பலராலும் பேசப்பட்டது.

ஆனால் இன்றுவரை நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா..? என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை.