Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

தொள தொள பேண்ட்.. மிதக்கும் படகில்.. ததும்பும் அழகு.. சுஜிதா க்யூட் போட்டோஸ்..!

2000 கால கட்டத்தில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடிகையாக தனது திரை வாழ்க்கை துவங்கியவர் தான் சுஜிதா.

கிட்டத்தட்ட 41 வயதாகியும் இன்றுவரை பிரபலமான சீரியல் நடிகையாக மார்க்கெட் தாக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

சீரியல் நடிகை சுஜிதா:

அடுத்த அடுத்த பல சூப்பர் ஹிட் தொடர்களில் முக்கியமான அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அவ்வளவு கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக தற்போது வரை இடத்தை பிடித்திருக்கிறார் சுஜிதா.

இவர் கேரளாவை சொந்த ஊராக கொண்டிருந்தாலும் தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

---- Advertisement ----

தமிழைத் தாண்டி மலையாள மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களிலும் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் கிடைக்கும் குண சித்திர வாய்ப்புகளையும் தவறாமல் ஏற்று நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி:

அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்தத் தொடரில் சுஜிதா மூத்த அண்ணியாக நடித்து கொழுந்தன்களின் வாழ்க்கையில் மிகவும் அக்கறை கொண்ட அண்ணியாக நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.

தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து தன்னுடைய கொழுந்தன்களுக்காகவும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காகவும் உழைக்கும் ஒரு அண்ணியாக நடித்து அசத்தியிருப்பார்.

நேர்மையான பெண்ணாகவும் நடித்து தமிழ் தொலைக்காட்சி தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தத் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் சீசனிலும் சுஜிதா இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால், தனக்கு இரண்டாவது சீசனில் நடிக்க விருப்பமே இல்லை என கூறி அதிலிருந்து விலகி விட்டார்.

அதற்கான காரணங்கள் வளர்ந்த மகன்களுக்கு அப்பாவாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என கூறினார் .

சுஜிதா தொடர்ந்து வேறு சில சீரியல்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் சுஜிதா.

மலையாள பெண்ணான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

மிதக்கும் படகில் கூல் போஸ்:

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருவிளையாடல், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தனக்கான பிரபலத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு வரும் சுஜிதா தனது வயதை மிகவும் இளமையாக காட்டும் வகையில் மாடன் உடைகளையும் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது சுஜிதா மிதக்கும் படகில் ஹாயாக காற்று வாங்கிய படி மாடர்ன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

சீரியல்களில் அடக்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக நடித்து பார்க்கப்பட்ட இவர் மாடர்ன் உடையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top